Politics
”தன்னலமற்ற ஒற்றைத் தலைமை தேவை” - அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர்க்கொடி!
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக ஒரேயொரு எம்.பியை மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல், இடைத்தேர்தலிலும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவை விட குறைவான தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.
இதனையடுத்து, தேனி மக்களவைத் தொகுதியில் வென்ற துணை முதல் ஓ.பி.எஸின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் அண்மையில் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். ஆனால், அவருடன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எந்த அதிமுகவினரும் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, அ.தி.மு.கவுக்கு தன்னலமற்ற ஒற்றை தலைமையே வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தாலும், தற்போது எவரிடம் அதிகாரம் இருக்கிறது என்பது தெரியவில்லை. எனவே, செயற்குழுவைக் கூட்டி கட்சிக்கான பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.” என பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இதுவரை, ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தாது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இரட்டை தலைமை உள்ளதாலேயே தேர்தலில் தோல்வியடைந்திருப்பதாகவும் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே பனிப்போர் நிலவும் சூழலில், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா போர் கொடி தூக்கியுள்ளது அ.தி.மு.கவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!