Politics
இனியும் பா.ஜ.க.,வின் வாய்ஜாலம் தமிழகத்தில் பலிக்காது - திருப்பூர் எம்.பி சுப்பராயன்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பராயன் தனது வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ``திருப்பூர் தொகுதியில் நான் வெற்றி பெற மாட்டேன் எனப் பத்திரிகைகளில் கணிப்புகளை வெளியிட்டார்கள். கருத்துகணிப்புகளுக்கும், மக்களின் மன ஓட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 93,368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன்.
எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவன் என்ற முறையில், நான் எனது கடமைகளை ஆற்றுவேன். தொகுதிப் பணிகளை நிறைவேற்ற ஒதுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி சேதாரமில்லாமல் மக்களிடத்தில் சென்றடைய உரிய வழிமுறைகளையும், தொடர் கண்காணிப்பையும் மேற்கொள்வேன். கமிஷன் என்ற சொல்லுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்பதையும், கடந்த காலத்தைப் போல் நிகழ்காலத்திலும் வாழ்ந்து காட்டுவேன். எங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று பணியாற்றியவர்களுக்கும் செயலாற்ற நான் கடமைப்பட்டுள்ளவன் என்பதை உணர்கிறேன்.
பா.ஜ.க மீது எங்களுக்கு எள்முனை அளவு கூட நம்பிக்கை கிடையாது. தேசிய நலன்களைப் புறக்கணிப்பது, தேசத்தின் சொத்துகளை அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு விற்பது போன்ற தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் பாஜகவினர். ஐந்து ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சி தமிழகத்தை ஒரு திவால் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. கடந்த காலங்களில் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இன்றைக்குக் கோதாவரி - காவிரி இணைப்பு என வாய் ஜாலங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்” இவ்வாறு கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!