Politics
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க கை ஓங்குகிறதா ? : வருத்தத்தில் மம்தா பானர்ஜி !
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணி பெரிய அளவில் பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டுள்ளது. பா.ஜ.க.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாரும் எதிர்பாரா வகையில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு இருக்கும் 42 இடங்களில் 19 இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகிக்கிறது. 20 இடங்களில்தான் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் அங்கு காட்சி மாறியது. திரிணாமுல் - பா.ஜ.க கட்சிகளிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும், பா.ஜ.க முன்னணித் தலைவர்களும் நேரடியாக மோதிக்கொண்டனர்.
அதேபோல வாக்குப்பதிவின் போதும் திரிணாமுல் - பா.ஜ.க தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், பா.ஜ.க பெற்றிருக்கும் வெற்றி அம்மாநிலத்தில் பா.ஜ.க.,வின் கை ஓங்கி இருப்பதைக் காட்டுகிறது. தற்போது அங்கு தற்போது கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் அங்கு முன்னிலை பெறவில்லை.
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 20 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. 2014 தேர்தலில் பா.ஜ.க 2 இடங்களை மற்றுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!