Politics

“மழை பெய்தால் ரேடாரிலிந்து விமானங்கள் மறைந்துவிடுமா?” : மோடியை கிண்டல் செய்த ராகுல்!

பிரதமர் மோடி கடந்த 11-ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருக்கும் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக, பாலகோட் தாக்குதல் நடத்திய போது, விமானப்படை வல்லுநர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் நடத்தவேண்டாம் என்று தான் சொன்னார்கள்;

ஆனாலும் அன்றைய தினம் மேகக் கூட்டங்கள் குவியலாக இருப்பதால் அது நமது விமானப் படை விமானங்கள் அவர்களது ரேடார்களில் சிக்காமல் சென்று தாக்குவதற்கு உதவும் என்று நான்தான் சொன்னேன்; அந்த அறிவுரைப்படியே தாக்குதல் நடந்தது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார்.

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் எதிர்க்கட்சியினர் மோடி செய்தது ராணுவத்தை அவமதிக்கும் செயல் என்றும் தெரிவித்து வருகின்றனர். பலரும் இதனைக் கிண்டலடித்து கருத்து பதிவு செய்து வருகின்றனர். இந்த நேர்காணலில் கூறியதை குறிப்பிட்டு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலுக்காக மத்திய பிரதசேத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, "இந்தியாவில் எப்போது மழை பெய்தாலும், ரேடாரில் இருந்து அனைத்து விமானங்களும் மறைந்துவிடுமா மோடிஜி, என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.