Politics
முகத்தை மூடிச் செல்லக்கூடாது - இலங்கை அதிபர் அதிரடி
ஈஸ்டர் தினத்தன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படையினரை குறிவைத்துத் தாக்குதலை நடத்தினர். 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது வரை நாடுமுழுவதும் பல இடங்களில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இலங்கையில் இன்றளவும் பதற்றம் குறையவில்லை.
இதனை கருத்தில் கொண்டு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில் இலங்கையின் பொது இடங்களில் மக்கள் அடையாளத்தை மறைக்கும்படி புர்கா போன்ற ஆடைகள் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அவசர கால அதிகாரத்தைப் பயன்படுத்தி அமுல்படுத்தப்படுள்ளது. மேலும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!