உணர்வோசை
காதலிப்போருக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன ? காதல் -திருமண உறவுக்கு இருக்கும் வேறுபாடுகள் என்ன ?
காதலுறவுக்கும் திருமண உறவுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.
நம்மூரில் திருமணம் செய்து கொள்ள காதல் ஒரு வழியாக இருப்பதால் திருமணமான தம்பதிகளிடம் பல குழப்பங்களும் விளைவாக முரண்களும் ஏற்படுகின்றனர்.
முதலில் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காதல், வேலை, வயது ஆகிய மூன்றுக்கும் ஒன்றோடொன்று தொடர்பு கிடையாது. வேலை பார்க்காமலும் காதலிக்கலாம்.பார்த்துக் கொண்டும் காதலிக்கலாம். ஒன்றை மற்றொன்று பாதிக்காது. பாதிக்கவும் கூடாது.
ஆனால் திருமணம், வேலை, வயது முதலிய விஷயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஏனெனில் திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கு பொருளாதார தேவை இருக்கிறது. அந்தப் பொருளாதாரத்தை ஊதியம் என நம் தலைகளில் சுமத்தும் சமூகத்தையே நாம் பெற்றிருக்கிறோம்.
இதற்கு அர்த்தம் காதலித்தால் திருமணம் செய்ய வேண்டியதில்லை என்பதோ வேலையைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை என்பதோ அல்ல.
காதலிப்போருக்கு வேறு பல பிரச்சினைகளும் உண்டு. அதில் ஒன்றுதான் பொருளாதாரம். காதலுக்கு மரியாதை பாணியில் இரு குடும்ப ஒப்புதலுக்கு காத்திருப்பீர்கள். குடும்பங்களோ வேறு இணையை உங்களுக்கு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் இருக்கும். சாதி, மதம், வர்க்கம், ஈகோ, பொசஸிவ்னெஸ் என பல பிரச்சினைகள் உண்டு.
எனவே காதல் முக்கியம். அந்த காதல், திருமணம் வரை சமூகப் பிரச்சினைகளை தாண்டி கொண்டு செல்லுதல் முக்கியம். திருமணத்துக்கு பிறகு குடும்பமாகும்போது பொருளாதாரம் முக்கியம் ஆகிறது.
திருமணம் என்பது சமூகத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார அலகு. ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் என்கிற உடன்படிக்கைக்குள் வந்துவிட்டால், ஒருவரை ஒருவர் சார்ந்து காப்பாற்றிக் கொள்ளுதல் அந்த அலகின் அடிப்படையாகி விடுகிறது. கூடுதலாக பிறக்கும் குழந்தையை சமூகத்துக்கு உகந்த வழியில் படிப்பு கொடுத்து வளர்த்து ஆளாக்குவதும் குடும்பத்தின் கடமையாகி விடுகிறது.
திருமணத்துக்கு பின்னான குடும்பம் என்கிற நிறுவனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கும் கடமைகள் அடிப்படையில் ஒன்றுதான். வேலை! குடும்பம் நடப்பதற்கான வேலை ஒன்று, அதற்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்கான வேலை மற்றொன்று. இரண்டிலும் ஓடி சிக்கி சின்னாபின்னமாவதே இன்றைய காதலாக மாறியிருக்கிறது.
காதல் ஓர் அற்புதமான அனுபவம். மானுட இருத்தலுக்கான தேவை. அந்த அனுபவத்தில் சக மனிதருடன் நீங்கள் கொள்ளவிருக்கும் உறவே முக்கியம். சக மனிதருடன் ஏற்படும் முரணை எப்படி சரி செய்கிறீர்கள், அதிகாரம் செலுத்தாமல் எப்படி சமமாக பாவிக்கிறீகள், அவர் சம்பந்தப்பட்டவற்றை எப்படி உங்கள் சம்பந்தமானவையாக include செய்து கொள்கிறீர்கள், உங்களுக்கு இருக்கும் சிக்கலை எப்படி அவருக்கு புரிய வைக்கிறீர்கள், காதலுறவு நீடிக்காமல் துவளாமல் எப்படி அடுத்த காதலுக்கு தயாராகிறீர்கள் முதலியவையே காதலின்போது நீங்கள் யோசிக்க வேண்டிய விஷயங்கள்.
மற்றவை எல்லாமும் இரண்டாம் பட்சம்தான்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!