உணர்வோசை

“1989 சட்டமன்ற கலவரத்தில் நடந்தது என்ன..?” : சம்பவத்தை நேரில் பார்த்த பீட்டர் அல்போன்ஸ் சொல்வது என்ன ?

கலைஞர் தொலைக்காட்சியின், ‘கேள்வியால் ஒரு வேள்வி’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று பேசினார். அப்போது 1989 சட்டமன்ற கலவரம் குறித்து பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது பின்வருமாறு :-

1989 கலவரத்தின் போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அன்றைக்கு நடைபெற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடந்த கலவரம் தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. முதலமைச்சராக இருந்த கலைஞரை பட்ஜெட்டை படிக்கவிடக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது. மேலும், பட்ஜெட்டை படிக்கவிடாமல் தடுத்துவிட்டால், அரசை கலைத்துவிடலாம் என ஜெயலலிதாவுக்கு யாரோ ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

அன்றைய தினம் என்னைதான் முதலில் அழைத்தார் ஜெயலலிதா. நான் எனது அறையில் இருந்தேன். அப்போது எங்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக மூப்பனார் இருந்தார். துணைத் தலைவராக குமரி ஆனந்தன் இருந்தார். கொறடாவாக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணி இருந்தார். இதில் சட்டமன்ற வேலைகளை பெரும்பாலும் நான்தான் பார்ப்பேன்.

அப்படி இருக்கையில், திருநாவுக்கரசும், கே.கே.எஸ்.எஸ்.ஆரும் எனது அறைக்கு வந்து, பீட்டர் உங்களை அம்மா கூப்பிடுகிறார் என்றனர். பின்னர் நானும் ஜெயலலிதா அவர்களின் அறைக்குச் சென்றேன். அப்போது ஜெயலலிதா, பீட்டர் today ask your people support me எனக் கூறினார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்போது எங்களிடம் சில திட்டம் உள்ளது. எனவே எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். நானும் எங்களின் கட்சித் தலைவர்களிடம் சொல்லுகிறேன் மேடம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

பின்னர் தலைவர் மூப்பனாருக்கு செல்போனில் அழைத்து, ஜெயலலிதா நம்மை சப்போர்ட் செய்யவேண்டும் என்கிறார் என்றேன். அப்போது ஏதோ பெரிய பிரச்சனை நடக்கபோகிறது என எண்ணி, சட்டமன்றத்திற்கு அன்றைய தினம் வரவேண்டாம் என்று நினைத்த தலைவர் மூப்பனார் உடனே கிளம்பி வந்துவிட்டார்.

வந்த பிறகுதான், சட்டமன்றத்தில் கலைஞர் பட்ஜெட் வாசிக்க எழுந்தவுடனே அவர்கள், என்ற ஏதோ ஒருவார்த்தையைச் சொல்லி, நீங்கள் படிக்கக்கூடாது என்று பட்ஜெட்டை பிடிங்கி கிழித்துவிட்டார். அப்போது பின்னால் இருந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், ஒருவினாடியில் கலைஞரை முகத்தில் குத்தினார். அதனால் அவரது கண்ணாடி உடைந்தது.

கலைஞரின் கண்ணாடி விழுந்த பிறகு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசமானார்கள். உடனே ஜெயலலிதாவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். அது அனைத்தும் ஒரு ஸ்டேஜ் மேனஜ் மெண்ட் மாதிரிதான் இருந்தது. அதன் பிறகு அந்த சம்பவம்தான் பேசப்படுகிற பொருளானது” எனத் தெரிவித்தார்.

Also Read: “1989 சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்று எப்படித் தெரியும்?”: மோடியின் பொய்களை வெளுத்து வாங்கிய ‘முரசொலி’!