உணர்வோசை
"அமைதியை குலைக்கும் பா.ஜ.கவின் முயற்சிக்கு உடந்தையாகிவிடக் கூடாது" : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-10
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!
இந்திய நாட்டின் அமைதியைக் குலைப்பதற்கு சிலர் திட்டமிடுகிறார்கள். அந்த சதிக்கு தமிழ்நாட்டு மக்கள் உடந்தையாகிவிடக் கூடாது!
இந்த நாட்டுக்கு உண்மையான அபாயம் எது?
* அமைதியைக் குலைப்பதே முதல் அபாயம்!
* இந்திய நாடு- ஒரு மொழி, ஒரு இனம், ஒரு மதம் கொண்ட நாடு அல்ல. இதில் பல்வேறு மொழிகள் பேசுபவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு மத நம்பிக்கைகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஒரே மதத்துக்குள் ஏராளமான உட் சமூகப் பிரிவுகள் இருக்கின்றன.இத்தகைய வேற்றுமைகள் கொண்ட மக்கள், ஒற்றுமையாக வாழும் சமூக அமைப்பு தான் இந்தியச் சமூக அமைப்பு. அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்த நாட்டை இத்தனை ஆண்டுகள் காப்பாற்றி வைத்துள்ளது.
* கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தக நிறுவனமும் அதன் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சி என்ற பெயரால் சுரண்டிக் கொண்டு இருந்தது. இந்த ஏகாதிபத்திய அரசை வீழ்த்துவதற்காக, அனைத்து மக்களும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒரு தாய் மக்களாக உணர்ந்து போராடினார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அனைத்து மதத்தினர், அனைத்து மொழியினர், அனைத்து இனத்தவர், ஆண்களும் பெண்களும், ஏழைகளும் பணக்காரர்களும் ஒன்று சேர்ந்து பங்கெடுத்தனர். அதனால் தான் இந்திய விடுதலை சாத்தியமானது. அத்தகைய ஒற்றுமையைக் குலைக்க நினைக்கும் மனிதர்கள் தான், இந்த நாட்டுக்கு உண்மையான அபாயம்.
* இந்தியா விடுதலை பெற்றபோது, 'விடுதலை பெற்ற இந்தியா ஒரு சில ஆண்டுகளில் வேறு வேறு நாடுகளாகச் சிதறிவிடும்' என்று பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் எழுதியது. அதற்கு ஏற்பவே மகாத்மா காந்தி, மதவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். 'இத்தனை ஆண்டுகள் காந்தியை நாங்கள் காப்பாற்றி வைத்திருந்தோம். உங்களால் ஓராண்டு கூட காந்தியை பாதுகாப்பாக வைத்திருக்க முடியவில்லை' என்றும் ஆங்கிலேயர்கள் சொன்னார்கள். இத்தகைய கொந்தளிப்பான காலக்கட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்குமான அரசை ஜவஹர்லால் நேரு அமைத்தார். வேறுபாடுகள், மாறுபாடுகள் அற்ற அரசை உருவாக்கினார். அதுதான் இந்தியாவை அமைதிப்படுத்தி இந்தளவுக்கு வளர்த்தது.
* அமைதியாய் வாழும் மக்கள் மனதில் பிரிவினை எண்ணத்தைத் தூண்டி, அமைதியைக் குலைக்கும் காரியத்தை இந்து மதம் என்ற பெயரைப் பயன்படுத்தி பா.ஜ.க செய்கிறது.
* இவர்களுக்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தங்களது அரசியலுக்காக இந்து மதத்தை போலியாக பயன்படுத்தி அமைதியைக் குலைக்கிறார்கள்.
* இந்தியாவுக்கு ஆபத்து உள்நாட்டில் இவர்களால் தான் ஏற்படுகிறது!
இந்திய மக்களின் உண்மையான பிரச்னை என்ன என்பதை சிந்திக்க விடாமல் திசை திருப்புகிறார்கள். ஏழை - பணக்காரன் உயர்சாதி - தாழ்த்தப்பட்ட சாதி நகரவாசி - கிராமவாசி படித்தவன் - படிக்காதவன் அதிகாரத்தில் இருப்பவன் - அதிகாரத்தில் இல்லாதவன் வேலையில் இருப்பவன் - வேலையில் இல்லாதவன் ஆண் - பெண் சொத்துடமை உள்ளவன் - சொத்துடமை இல்லாதவன் உயர் வர்க்கம் - தாழ்த்தப்பட்ட வர்க்கம் நிலம் உள்ளவன் - நிலம் இல்லாதவன் சுயசாதி பலமுள்ளவன் - சுய சாதி பலமற்றவன் ஆதிக்க இனத்துக்காரன் - ஆதிக்கமற்ற இனத்துக்காரன் பெரிய மாநிலத்தவன் - சிறிய மாநிலத்தவன் வட மாநிலத்தவன் - தென் மாநிலத்தவன் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவன் - சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவன்- இப்படி எத்தனையோ பிரச்னைகள் இந்தியச் சமூகத்தில் இருக்கிறது.
இந்த உள் முரண்பாடுகள் எதையும் களையாமல், கவனிக்காமல், கவனிக்கவிடாமல் திசை திருப்புகிறார்கள். உள்முரண்பாடுகளைச் சரி செய்தாலே வெளி முரண்பாடுகள் உள்ளே நுழையாது! இந்த உள் முரண்பாடுகளை மக்கள் உந்துணர்ந்து உண்மையான எதிரி மீது மக்கள் கோபம் கொண்டு விடக்கூடாது என்பதற்காகக் தான் இந்த அந்நிய மத, நாட்டுப் பூச்சாண்டி எல்லாம்!
மதம், கடவுள், ஆன்மிகம் என்பவை அனைத்தும் ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பங்கள். நம்பிக்கைகள். அவை மாறும். மாற்றிக் கொள்ளலாம். சிந்தனை, எண்ணம், மனம், வசதி வாய்ப்புகள், நல்லது கெட்டதுகள் மூலமாக அது மாறுதலுக்கு உட்பட்டது. அந்த மதத்தைக் காப்பாற்றுவதற்காக மனிதப் பிறவி எடுத்ததாக சொல்லிக் கொள்பவர்களது உண்மையான நோக்கம், தங்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதுதான். பத்திரிக்கையாளர் துக்ளக் சோ அவர்கள் சொன்னார், 'கோவிலை மட்டுமே நம்பி கட்சி நடத்தினால் அந்தக் கட்சி வளராது" என்று சொன்னார். அப்படி வளராத, வளர முடியாதவர்கள் தான் தி.மு.கவை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். கோவில்களில் சமத்துவம் வந்துவிட்டால் நான் கோவிலைப்பற்றியோ, கடவுளைப் பற்றியோ கவலைப்பட மாட்டேன் என்று தான் தந்தை பெரியாரே சொன்னார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் பேரறிஞர் அண்ணா!
கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்று தான் சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது என்றார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
யாருடைய நம்பிக்கைக்கும் எப்போதும் எந்தக் காலத்திலும் குறுக்கே நின்றது அல்ல கழகம்.
''பக்திப் பிரச்சாரம் ஒரு பக்கம் நடக்கட்டும், பகுத்தறிவுப் பிரச்சாரம் மறு பக்கம் நடக்கட்டும்" என்றார் கலைஞர். இந்த ஜனநாயக மாண்பைத் தான் திராவிட முன்னேற்றக் கழகம் விதைக்க நினைக்கிறது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கி அழகு பார்த்த இயக்கம் இது. அதனால் தான் ஆச்சார்யா வினோபா பாவே அவர்கள் சொன்னார்கள்: ''கருணையையும் நிதியையும் தனது பெயரில் தாங்கியவரின் ஆட்சி" என்று சொன்னார்கள்! அத்தகைய கருணையும் நிதியும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை உருவாக்க உதயசூரியனுக்கு வாக்களிப்பீர். நன்றி வணக்கம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!