murasoli thalayangam
“போதைப் பொருள் கடத்திய பா.ஜ.க - பழனிசாமி ஆட்சியில் போதைப் பொருட்களை ஒழித்த லட்சணம் இதுதான்” : முரசொலி!
'குட்கா' பழனிசாமி!
போதைப் பொருள் அதிகமாகி விட்டதாகச் சொல்லி போராட்டம் நடத்தப் போகிறாராம் 'குட்கா' பழனிசாமி!
ஜாபர் சாதிக் என்பவர் எந்த மாநிலத்தில் மாட்டினார்? எங்கோ மாட்டினார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டில் போதை மருந்து பரவி விட்டது என்று சொல்ல முடியுமா? என்ன புத்திசாலிகள் இவர்கள்? இந்த மாதிரியான கற்பனைகள் எல்லாம் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்குத்தான் வரும். அவதூறுகளை அள்ளித் தெளிப்பதன் மூலமாக பிழைப்பு நடத்தும் பேர்வழிகள் இவர்கள்.
போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க ஆளுநர் ரவியிடம் போய் மனுக்கொடுத்துள்ளார் பழனிசாமி. அவர் என்ன டி.ஜி.பி.யா? அவரால் எப்படி தடுக்க முடியும்? மாநிலத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகமாகவும் இல்லை. அதைத் தடுக்க இன்றைய அரசு மெத்தனமாக இருக்கவும் இல்லை. ஆனால் தனது ஆட்சி காலத்தை 'குட்கா' காலமாக வைத்திருந்தவர் பழனிசாமிதான்.
குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கி அவர் கட்சி நடத்தினார் என்பதை சி.பி.ஐ. நடத்தி வரும் வழக்கு முடியும் போது தெரியவரும். சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது.
குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்துகிறது. அப்போது தங்களது வியாபாரத்துக்கு துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள் அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இது தொடர்பான வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், "டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப்படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இவை அனைத்தும் பழனிசாமி ஆட்சியில் நடந்தவை ஆகும். ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது.
அதில் அ.தி.மு.க. ஆட்சி காலத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இரு டி.ஜி.பி.க்கள் பெயர்கள் இருந்தன. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர் இடம் பெறாத வகையில் பழனிசாமி இவர்களை காப்பாற்றினார். சில ஊழியர்களை மாட்டி விட்டு அ.தி.மு.க. அமைச்சர்களை தப்பிக்க வைத்தார் பழனிசாமி.
அ.தி.மு.க. அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்துறை அனுப்பி இருந்தது. அந்த ஆவணங்களையே காணாமல் ஆக்கினார்கள் பழனிசாமி ஆட்சியில் குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார். அவர் இருந்தால் இந்த வழக்கை முறையாக நடத்தி விடுவார் என்று பயந்து தூக்கி அடித்தார் பழனிசாமி.
உயர்நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப் பட்டு - குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே.ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். 5 மாதங்களில் பழனிசாமியால் மாற்றப்பட்டார். குட்கா வழக்கில் தொடர்புடைய சிவக்குமார், செந்தில் முருகன் - ஆகிய இரண்டு அரசு ஊழியர்கள் மீது ‘வழக்குத் தொடர' சி.பி.ஐ. அனுமதி கோரியது. அதற்கு பழனிசாமி அரசு அனுமதி தரவில்லை. திரும்பத் திரும்ப கேட்ட பிறகு 20 மாதங்கள் கழித்து அனுமதி அளித்தார் பழனிசாமி. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீதான நடவடிக்கைக்கு பழனிசாமி இறுதிவரை அனுமதி தரவே இல்லை.
எந்த அதிகாரிகள் மீது புகார் எழுந்ததோ, அவருக்கே பணி நீட்டிப்பு தரப்பட்டது பழனிசாமி ஆட்சியில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பரிகாரம் தேட வழக்கு போட அவருக்கே அனுமதியும் தரப்பட்டது. இதுதான் பழனிசாமி, தனது ஆட்சி காலத்தில் போதைப் பொருட்களை ஒழித்த லட்சணம் ஆகும். இப்போது போதைக்கு எதிராக போராட்டம் நடத்த வந்திருக்கும் பழனிசாமியின் லட்சணம் இதுதான்.
மனுவை யாரிடம் கொடுக்கிறார்? பா.ஜ.க.வின் கிண்டி கிளைச் செயலாளரைப் போலச் செயல்படும் ஆளுநரிடம் கொண்டு போய் கொடுக்கிறார் பழனிசாமி. போதைப் பொருள் கடத்தியதாக பா.ஜ.க.வைச் சேந்த 14 பேர் சிறையில் இருக்கிறார்கள்.
* Narcotics drugs and Psychotropic Substances act 1985 (NDPS Act) என்கிற போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தின் கீழ் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடு துறை, மதுரை உள்ளிட்ட காவல் பகுதிகளில் கைதானவர்கள் பட்டியல் இது...
1. சரவணன் (பா.ஜ.க. உறுப்பினர்).
2. ராஜேஷ் (சென்னை 109 வார்டு பா.ஜ.க வட்டத் தலைவர்)
3. விஜய நாராயணன் (பா.ஜ.க., மத்திய சென்னை மேற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்).
4. விஜயலட்சுமி (பா.ஜ.க. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர், நெடுகுன்றம் துணை தலைவர்).
5. மணிகண்டன் (பா.ஜ.க. தாழ்த்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர்).
6. ஆனந்த் ராஜ் (திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. SC/ST பிரிவு மாவட்ட துணைத் தலைவர்).
7. ராஜா என்ற வசூல் ராஜா (காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞர் நலன்
அபிவிருத்தி பிரிவு செயலாளர்).
8. குமார் @ குணசீலன் (பா.ஜ.க. உறுப்பினர்).
9 மணிகண்டன் (திருச்சி பா.ஜ.க. உறுப்பினர்).
10. லுவிங்கோ அடைக்கலராஜ் (பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. முன்னாள் செயலாளர்).
11. சிதம்பரம் என்ற குட்டி (தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவர்).
12.ராஜா என்கிற சூரக்கோட்டை ராஜா (பா.ஜ.க. விவசாய பிரிவு மாநிலச் செயற்குழு உறுப்பினர்).
13. சத்யா என்கிற சத்யராஜ் (பா.ஜ.க. உறுப்பினர்).
14. காசிராஜன் என்கிற காசி (மதுரை நகர பா.ஜ.க. இளைஞர் பிரிவு செயலாளர்).
- போதைக்கு எதிராக அறிக்கை கொடுக்க முழுத் தகுதி உடையவர்தான் பா.ஜ.க. கால ஆளுநர் ரவி!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!