murasoli thalayangam

“'தமிழக அணைகளின் நாயகன்' என்று கலைஞரை தினமலரே பாராட்டியது..” - முரசொலி !

அணைகளின் நாயகன் கலைஞர் !

* உப்பாறு - ஆழியாறு அணை

* உப்பாறு - சோலையாறு அணை

* சோலையாறு அணை

* ராமநதி அணை

* பொன்னியாறு அணை

* பில்லூர் அணை

* பரப்பனாறு அணை

* மஞ்சளாறு அணை

* மணிமுடிதாங்கி அணை

* கீழ் கொடையாறு அணை

* பிளவுக்கல் - பெரியாறு நீர்த்தேக்கம்

* பிளவுக்கல் - கோவிலாறு நீர்த்தேக்கம்

* கடானா நீர்த்தேக்கம்

* இராமநதி நீர்த்தேக்கம்

* கருப்பாநதி நீர்த்தேக்கம்

* சித்தாறு நீர்த்தேக்கம்

* மேல் நீராறு நீர்த்தேக்கம்

* கீழ் நீராறு நீர்த்தேக்கம்

* பெருவாரி பள்ளம் நீர்த்தேக்கம்

* சின்னாறு

* மருதாநதி நீர்த்தேக்கம்

* சின்னாறு நீர்த்தேக்கம்

* குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கம்

* வறட்டுப்பள்ளம் நீர்த்தேக்கம்

* பாலாறு பொரந்தலாறு நீர்த்தேக்கம்

* வரதமாநதி நீர்த்தேக்கம்

* பரப்பலாறு நீர்த்தேக்கம்

* மோர்தானா நீர்த்தேக்கம்

* ராஜாதோப்பு நீர்த்தேக்கம்

* பொய்கையாறு நீர்த்தேக்கம்

* இருக்கன்குடி அணை

* மாம்பகத்துடையாறு அணை

* நல்லதங்காள் அணை

* நாங்கியாறு அணை

* செண்பகத்தோப்பு அணை

* சோத்துப்பாறு அணை

- இப்படி ஏராளமான அணைகளை, நீர்த்தேக்கங்களை உருவாக்கிய அரசுதான் தி.மு.கழக அரசு.

இருபதாம் நூற்றாண்டில் இத்தகைய மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய நவீன கரிகால் சோழன்தான் நம்முடைய கலைஞர் அவர்கள். இவை அனைத்தும் கழக அரசின் கம்பீரத்துக்கான சாட்சியங்களாக இன்று வரை இருக்கின்றன.

1967 ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள் இருக்கிறார்கள். 1969 முதல் 1976 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட அணைகள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டன. இக்காலக்கட்டத்தில் தலைவர் கலைஞர், சாதிக் பாட்சா, ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோர் பொதுப்பணித் துறை அமைச்சர்களாக இருந்தார்கள்.

1989-91, 1996-2001, 2006-2011 ஆகிய காலக் கட்டங்களில் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது 22 அணைகள் கட்டப்பட்டன. அப்போது மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார்கள். 1967 ஆம் ஆண்டு கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்தவை 15 அணைகள். கழக ஆட்சியில் கட்டப்பட்டவை 42 அணைகள்.

'தினமலர்' பத்திரிக்கையே - 'தமிழக அணைகளின் நாயகன் கருணாநிதி' என்று 9.8.2018 அன்று தனது இணையதளத்தில் எழுதி இருக்கிறது. இதையாவது அந்த அரைகுறை மனிதன் படித்திருக்க வேண்டும்.

இதை எல்லாம் தெரிந்து கொள்ள முயற்சிக்காத தற்குறிகள் சில, திடீரென, 'தி.மு.க. காலத்தில் அணைகளே கட்டப்படவில்லை' என்று உளற ஆரம்பித்துள்ளன. இதற்கு நீர் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் முழுமையான அறிக்கையை அளித்துள்ளார்கள். 'எதையும் தெளிவாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார்கள். பா.ஜ.க. அரைகுறைகள், தெரிந்தே தான் இதுபோல பொய்களைப் பரப்புகிறார்கள்.

பா.ஜ.க.வின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்பதற்கு எதுவும் இல்லை. அதனால்தான் அடுத்தவர்களைக் குறை சொல்லி காலத்தைப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் என்ன சொன்னார்? '' 5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகளை இணைக்கப் போகிறேன். எனது வாழ்நாள் லட்சியம் இதுதான்" என்று சொன்னார் மோடி. செய்துவிட்டாரா? அதனை இந்த தற்குறிகள் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டும். 2017 ஆம் ஆண்டு தொடங்கப் போவதாக ஒரு முறை அறிவித்தார்கள். 2019 ஆம் ஆண்டு தொடங்கப் போவதாக ஒருமுறை அறிவித்தார்கள். இப்போது 5.5 லட்சம் கோடி திட்டத்தின் நிலைமை என்ன?

அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டதையும் தி.மு.க. ஆட்சி தனதாகச் சொல்லிக் கொள்கிறது என்கிறது அந்த தற்குறி. தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சி முடித்து வைத்திருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை, தி.மு.க. ஆட்சி திறந்து வைத்திருக்கும். அணைகளை, டீ கடை போல ஒரு நாள் ராத்திரியில் உருவாக்கி விட முடியாது.

சர்தார் சரோவர் அணையை 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்த திட்டத்துக்கான அடிக்கல் 1961 ஆம் ஆண்டு பிரதமர் நேரு அவர்கள் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார். 1979 ஆம் ஆண்டு ஜனதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது கட்டுமானப் பணிகள் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்தன. அணையின் உயரத்தை அதிகப்படுத்து வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இந்தப் பணிகள் 2017 இல் முடிந்தது. மோடி வருகை தந்து திறந்து வைத்தார். இதுதான் சர்தார் சரோவர் அணையின் வரலாறு. திறந்து வைத்த சாதனை அவருக்கு போய்விட்டது.

மேலும், ஹோட்டல் போல கண்ட இடத்தில் எல்லாம் அணை கட்டி விட முடியாது. எங்கு அவசியத் தேவையோ அங்குதான் கட்ட முடியும்? அது தெரியாமல், 'அணைகள் ஏன் கட்டவில்லை?' என்று தற்குறித்தனமாகக் கேட்கக் கூடாது. தற்குறிகள் வாயைத் திறக்க வேண்டாம்!

Also Read: “ரமேஷ் பிதுரியின் பாசிச பேச்சு.. கூச்சமோ, அருவெறுப்போ பாஜகவுக்கு இல்லையா?” : வெளுத்து வாங்கிய முரசொலி !