murasoli thalayangam
“திட்டங்களைத் தீட்டி, சொல்லாததையும் செய்து காட்டும் முதலமைச்சர்” : ‘முரசொலி’ தலையங்கம் பாராட்டு !
அள்ளிக் கொடுத்த முதலமைச்சர்
தினந்தோறும் திட்டங்களைத் தீட்டிக் கொடுத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 77 ஆவது சுதந்திரத் தினமான ஆகஸ்ட் 15 அன்றும் அருமையான திட்டங்களை அறிவிக்கும் நாளாக அதனை மாற்றிக் காட்டி விட்டார்.
1. நடப்பு ஆண்டில் பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த 55 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
2. கட்டணமில்லா பேருந்து வசதிக்கு 'விடியல் பயணம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
3. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக போய்ச் சேர்ந்து விடும்.
4. அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை வரும் நிதி ஆண்டில் 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் பெறுவார்கள். இதற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5. காலை உணவுத் திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 31,008 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் இனி காலை உணவுத் திட்டத்தில் இணைக்கப்பட இருக்கிறார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இத்திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள். 404 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6. இளைஞர்களுக்கு, மாணவர்களுக்குத் தனித்திறமையை உருவாக்கத் தொடங்கப் பட்ட 'நான் முதல்வன்' திட்டமானது முன்னாள் ராணுவத்தினருக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இளம் வயதில் நாட்டுக்காக எல்லையில் பணியாற்றி, பணிக்காலம் நிறைவு பெற்றுத் திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் பேருக்குப் பயிற்சி தரப்பட உள்ளது. இதற்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ (Ola, Uber, Swiggy, Zomato) போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் (GIG workers) ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வண்ணம், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.
8.ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்கு வதற்கென ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.
9. ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்க்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
10. விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
11.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் - – கிள்ளிகுளத்தில் இயங்கி வரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும்.
12. சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
13.மக்களுக்கு நேரடியாகத் தொடர்பு கொண்ட அனைத்துத் துறைகளும் மாநிலப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.
14.கல்வி மாநிலப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.
15.‘நீட்’ தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் - ஆகியவை அனைத்தும் முதலமைச்சரின் ஒரே நாள் ஒரே உரையில் இடம் பெற்றவை ஆகும்.
பதவியேற்ற அன்றைய தினமே ஐந்து கோப்புகளில் கையெழுத்துப் போட்டவர் முதலமைச்சர் அவர்கள். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் 75 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
* மதுரையில் எழுந்துள்ள நூலகம்
* சென்னையில் எழுந்துள்ள மருத்துவமனை - – இரண்டுமே தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதது ஆகும். விவசாயிகளுக்கு தரப்பட்டுள்ள 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகள் என்பதும் தேர்தல் அறிக்கையில் சொல்லாதது ஆகும். சொன்னதையும் செய்து, சொல்லாததையும் செய்து காட்டும் அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு அமைந்துள்ளது.
கடந்த மார்ச் 1 தனது பிறந்தநாளின் போது ஏற்றமிகு ஏழு திட்டங்களைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் அவர்கள்.
* மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க TICCI அமைப்புடன் ஒப்பந்தம் அன்றைய தினம் கையெழுத்தானது.
* சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவதையும் பார்க்கிறோம்.
* மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் அறிவிப்பை முதலமைச்சர் செய்தார்.
* திருநங்கையர்க்கு மாதம்தோறும் வழங்கும் உதவித் தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
* பல்வேறு துறைகளில் உள்ள அரசுப் பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு 1000 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது.
* காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
* 1,941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 58 இடங்களில் புதிய மருத்துவமனைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இவை அனைத்தும் தனது பிறந்த நாளில் முதலமைச்சர் செய்தது ஆகும். தனது பிறந்தநாளாக இருந்தாலும் நாட்டுக்கு சுதந்திர நாளாக இருந்தாலும் அவை அனைத்தையும் கொண்டாட்ட நாளாக இல்லாமல் திட்டங்களைத் தீட்டித் தரும் நாளாகவே மாற்றிக் காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!