murasoli thalayangam
12 ஆண்டுகளுக்கு பிறகு.. ஓய்வூதியத்தை உயர்த்திய தி.மு.க அரசு: கருணை வடிவிலான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முரசொலி தலையங்கம் (25-07-2023)
கருணை வடிவிலான அரசு!
முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியங்களை உயர்த்தி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இப்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இனி 1,200 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் உயர்த்தித் தரப்படவில்லை. கருணை வடிவிலான முதலமைச்சர் இதனை உயர்த்தி வழங்கி உள்ளார்.
கொரோனா பரவிய போது தமிழ்நாட்டில் பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். கடைசி வரைக்கும் பழனிசாமி தரவில்லை. நாம் ஆட்சிக்கு வந்ததும் முதலில் 2 ஆயிரம், பின்னர் 2 ஆயிரம் வழங்கினார் முதலமைச்சர் அவர்கள். முதலில் 22 மளிகைப் பொருட்களையும் - பின்னர் 14 மளிகைப் பொருள்களை யும் வழங்கினார் முதலமைச்சர் அவர்கள். கொரோனாவை வென்றவர் மட்டுமல்ல கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களின் வாழ்க்கையையும் மீட்டுத் தந்தவர்தான் முதலமைச்சர் அவர்கள்.
அதன்பின்னர் ஏழை எளிய மகளிர் பயன்பெறும் வகையில் கட்டண மில்லா பேருந்து பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார் முதலமைச்சர். மாதத்துக்கு 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பெண்களால் சேமிக்க இந்தத் திட்டம் காரணமாக இருக்கிறது.
ஐந்து பவுன் வரை நகைக்கடன் வைத்துள்ள பதிமூன்றரை லட்சம் பேருக்கு நகைக்கடனை ரத்து செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரிக் கல்விக்குச் செல்ல முடியாத அரசுப் பள்ளி மாணவியர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். இது ஏழை எளிய மாணவியர்க்கு பயனுள்ளதாக உள்ளது.
காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி உள்ளார். இது அறிவுப்பசியைப் போக்குவதற்கு முன்னதாக கல்விப் பசியைப் போக்குவதாக அமைந்துள்ளது.
மகளிர் நலனையும், அவர்களது மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு செயல்படுத்திக் காட்டிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையிலும், அவரது நூற்றாண்டு விழாவிற்கு மேலும் பெருமைச் சேர்க்கும் விதத்திலும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் (Global Gender Gap Report 2023), தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127- ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் மிகவும் கவலைக்குரிய செய்தியாகும்.
இதற்கு முக்கிய காரணமாக பெண்களின் பொருளாதார நிலைமையும். கல்வி நிலையுமே உள்ளன. இந்த இரு காரணங்களால் முன்னேற்றம் காணாமல் சமூகத்திலும், குடும்பங்களிலும் மகளிர் உரிய அங்கீகாரம் பெற இயலாது. இல்லறப் பொறுப்புகளுடன் பணிகளுக்குச் சென்று. அதன் மூலம் தங்கள் குடும்பங்களின் உயர்வுக்கு உழைத்து வரும் மகளிரின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க வேண்டும். இதற்காக ஒரு கோடி மகளி ருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறார் முதலமைச்சர். பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரத்தை அரசு வழங்குகிறது. இதன் மூலமாக பொருளாதார வளத்தை மட்டுமல்ல; சமூக மரியாதையையும் மகளிர் பெறுவார்கள். செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்க உள்ளது.
இதனுடன் முதியோர் ஓய்வூதியத்தையும் உயர்த்தி வழங்க உத்தரவிட் டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப் பட்ட இந்த முடிவை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் இந்திரா காந்தி மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதியத் திட்டம். மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம். ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்றோர்/ கணவரால் கைவிடப் பட்டோர் ஓய்வூதியத் திட்டம். 50 வயதிற்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம். இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1962ஆம் ஆண்டில் மாதம் 20 ரூபாயாக இந்த ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டது. படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூபாய் 1,000 மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 1-1-2023 முதல் 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சரால் வழங்கப்பட்டுள் ளது. இது தவிர முதியோர் உதவிப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறு பவர் களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப் பிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 30,55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூகியம் பெற்று வருகின்றனர்.
பல்வேறு ஓய்வூதியங்கள் பெற்றுவருபவர்களின் வாழ்வாதார மற்றும் சமூக நிலையை கருத்தில் கொண்டு இந்த ஓய்வூதியத்தை ரூபாய் 1,000- லிருந்து ரூபாய் 1,200-ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இத்துடன் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள 74,073 நபர்களில் தகுதியுள்ள பயனாளி களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
30 லட்சம் பேருக்கு உதவப் போகும் அறிவிப்பாக இது அமைந்துள்ளது. இதனை விட முதலமைச்சரின் கருணை உள்ளத்துக்கு ஆதாரம் தேவையில்லை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!