murasoli thalayangam
“டேபிளுக்கு கீழே ஊர்ந்து போய் பதவி பெற்ற ‘ஆண்மை’ ஆராய்ச்சியாளருக்கு மீசை ஏன்?”: எடப்பாடியை சாடிய முரசொலி!
‘ஆண்மை’ ஆராய்ச்சியாளர்!
ஊர் ஊராகப் போய் லாட்ஜ்களில் ரூம் போட்டு ‘ஆண்மை’ ஆராய்ச்சி செய்யும் ஆட்களின் வரிசையில் ஒருவர் இப்போது இணைந்து இருக்கிறார். அவர் ஈரோட்டில் ரோட்டில் நின்று கொண்டு - ‘ஆண்மை இருக்கிறதா?’ என்று தெருவைப் பார்த்துக் கேட்கிறார். ‘ஆம்பளையா இருந்தா வா’ என்று அழைக்கிறார். ‘மீசை வெச்சிருக்க வேண்டும்’ என்கிறார். ஆத்திரக்காரனுக்கு எதுவும் இருக்காது என்பது அவரது உடல்மொழியில் இருந்தே தெரிகிறது. இவ்வளவு ஆத்திரம் ஒருவருக்கு வருவானேன்?
ஈரோடு கிழக்கில் தோற்றுப் போகப் போகிறோம் என்ற பயமா? சட்டமன்றத் தேர்தலிலேயே தோற்றுப் போன பிறகு வராத ஆத்திரம் இப்போது ஏன் வர வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலில் பன்னீர் மகன் தவிர - அனைவரும் தோற்றபிறகும் வராத ஆத்திரம் இப்போது ஏன் வர வேண்டும்? ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தோற்ற போது வராத ஆத்திரம் இப்போது ஏன் வர வேண்டும்?
ஜெயலலிதா இவை அனைத்தையும் கொடுத்துவிட்டுத்தான் போனார். அவை அனைத்தையும் நாசம் செய்த போது வராத ஆத்திரமும் - கோபமும் இப்போது ஏன் வர வேண்டும்? ஏன் என்றால் - இப்போது சொந்தக் கட்சியையும் இழந்து, அதாவது வேட்டியையே இழந்து நிற்பதால் ஆத்திரம் அதிகமாக வரத் தானே செய்யும்? இடைக்கால - தற்காலிக - அரைகுறைப் பொதுச்செயலாளராக அ.தி.மு.க.வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த உதவாக்கரை பதவியையும் தக்க வைக்க முடியவில்லை என்றால் கோபம் வரத்தானே செய்யும்?
ஒருவன் கிழிந்த நோட்டு வைத்திருந்தானாம்? அந்தக் கிழிந்த நோட்டை ஒட்டிக் கொண்டு போய்க் கொடுத்தானாம். கடைக்காரர் சொன்னாராம்? ‘இது கள்ளநோட்டு’ என்று. அதாவது கள்ளநோட்டுக்கு எத்தனை ஒட்டுப் போட்டாலும் அது செல்லாது அல்லவா? அதைக் கடை கடையாகத் தூக்கிக் கொண்டு திரிந்தவனைப் போல ‘இடைக்காலப் பொதுச்செயலாளர்’ என்பதைத் தூக்கிக் கொண்டு திரிந்தார்.
அதுவே செல்லாது, உன் பொதுக்குழுவே செல்லாது, அது பொதுக்குழுவே அல்ல, அது கட்சியே அல்ல என்கிற அளவுக்கு உடலுறுப்பின் அத்தனை பாகமும் அழுகிக் கிடக்கும் கட்சிக்கு உதடு மட்டுமே ஒழுங்காக இருக்கிறது. அதை வைத்து உளறிக் கொண்டு இருக்கிறார் ஒருவர்.
கட்சியில் நான்கு பேரை கப்பம் கட்டுவதற்காக வைத்திருந்தார் ஜெயலலிதா. சொறி, சிரங்கு, படை, தேமல் என்று அ.தி.மு.க. பெண் அமைச்சர் ஒருவரே அப்போது கமெண்ட் அடிப்பார். அந்த நால்வரில் ஒருவராக இருந்தவர் இவர். ஒழுங்காக போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதால் ஜெயலலிதாவை விட சசிகலாவின் அனுக்கிரகம் அதிகமாக இவருக்கு இருந்தது.
பன்னீர் கம்பி நீட்டியதும் இவருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார் சசிகலா. டேபிளுக்கு கீழே போய் - ஊர்ந்து போய் - காலைத் தேடி - மீசையில் மட்டுமல்ல – வேட்டியிலும் கூவத்தூர் அழுக்கு பட உருண்டு போய் - பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்க்கு மீசை இருந்தால் என்ன? வேட்டி விலகினால் என்ன? சட்டை கிழிந்தால் என்ன?
பதவியைத் துண்டு - வேட்டியை கொள்கை என்று சொல்வார்கள் பெரியவர் கள். பதவி கிடைக்குமானால் துண்டைக் காணோம் - துணியைக் காணோம் என்று ஓடிப் போய் - மன்னார்குடி மண்ணையே தின்று செறித்தவர்கள் ஈரோடு மண்ணில் வேன் மேலே ஏறலாமா? வெட்கம்! வெட்கம்! வெட்கம்!
இதைக் கேட்க ஜெயலலிதா இல்லையே! இருந்திருந்தால் மீசையை நறுக்கி இருப்பார். டயரை பார்த்து வணங்கிய கூட்டம் இது. ஹெலிகாப்டரைப் பார்த்து வணங்கிய கூட்டம் இது. ‘அம்மாவைக் காலையில பார்க்கப் போறதா இருந்தா முந்தின நாள் கூட சரியா சாப்பிட மாட்டோம், ஏப்பம் வந்திடக் கூடாதுல்ல’ என்று அப்போது ஒரு அமைச்சரே சொன்னதாகச் சொல்வார்கள். ஜெயலலிதா இறந்தபிறகு அவரையே ஏப்பம் விட்டவர்கள் என்பதை நாடறியும்.
‘இவனுக எல்லாரும் டயர் நக்கிகள்’ என்று அன்புமணி ராமதாஸ் சொன்ன போது இவர்களுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தைலாபுரம் தோட்டத்தில் தலைவாழை இலை போட்டுச் சாப்பிட்ட போது இந்த சவடால்தனம் எங்கே போனது? ஏன் அப்போது நாக்கு எழவில்லை? மீசை தொங்கியது ஏன்? வேட்டியை கக்கத்தில் சுருட்டி வைத்துக் கொண்டு சாப்பிட்டார்களே?
தலைமைச் செயலகத்தில் ரெய்டு விடும் போது வேட்டி இடுப்பில் இருந்ததா இல்லையா?
விஜயபாஸ்கர் வீட்டில் விசாரணை நடந்தபோது - பேண்ட் போட்டிருந்தார்களா?
கொடநாடு கொலை - கொள்ளைக்கு காரணம் இவர்தான் என்று நேருக்கு நேராக ஒரு பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியபோது மீசையின் ஒரு முனை கூடத் துடிக்கவில்லையே ஏன்?
அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது வருவானேன்? ‘மேற்கு மண்டலம் எங்கள் பேட்டையாக்கும்’ என்ற பிம்பம் இடிந்து விழத் தொடங்கி இருக்கிறது. அதனால் கோபம். உள்ளூர் மக்கள் கோபத்தில் அ.தி.மு.க. வேட்பாளரையே விரட்டுகிறார்கள். அதனால் பக்கத்து தொகுதி ஆட்களை அழைத்து வந்து லோக்கல் ஆட்களைப் போல நிறுத்தி வைக்க வேண்டிய அளவுக்கு நிர்பந்தம் வந்துவிட்டது. ஏற்கனவே, சேலத்தைத் தாண்டினால் மரியாதை இல்லை, - அதனால்தான் தெருவில் நின்று கத்துகிறார். ‘சிலரிடம்’ தெருவில் சண்டை போடக் கூடாது என்பார்கள். அதனால்தான் அவரது பெயர் இங்கு பயன்படுத்தப்படவில்லை!
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!