murasoli thalayangam
“ஆட்சியியலை அரசியலாக பார்க்காமல் அன்பியலாகப் பார்க்கிறார் முதலமைச்சர்” - முரசொலி பாராட்டு !
* குருநானக் கல்லூரி
* அசோக் நகர் பெண்கள் மேனிலைப்பள்ளி -
ஆகிய இரண்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை என்பது தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்துக்கு அப்பாவாக, அம்மாவாக, தலைவராக, முதல்வராக என நான்குமாக அவர் உயர்ந்து நிற்பதையே காட்டுகிறது. அனைத்துமான அனைவர்க்குமான தாயுமானவனாக அவர் உயர்ந்து நிற்பதையே காட்டுவதாக சமூக ஊடகங்களில் வரும் பாராட்டுதல்கள் மூலமாக உணர முடிகிறது.
'உங்களில் ஒருவன்' என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அடையாளச் சொல்லாகும். அப்படித்தான் அவர் தன்னை அறி முகம் செய்து கொள்கிறார். மிக உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்பதால், அனைவரையும் விட நான் மேலானவன் என்று அவர் நினைத்துக் கொள்வதில்லை . அதனால்தான், 'உங்களில் ஒருவனான நான்' என்பதை அவர் அடிக்கடி உச்சரித்து வருகிறார். சென்னையில் நடை பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளிலும் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட கருத்துக்கள் உங்களில் ஒருவனாக மட்டுமல்ல, உண்மையில் ஒருவனாக அவர் இருப்பதன் அடையாளமே!
அண்மைக் காலமாக சில தனியார் கல்வி நிறுவனங்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், மாணவியரின் மர்ம மரணங்கள், தற்கொலைகள் ஆகியவற்றை மனதில் வைத்து முதலமைச்சர் இத்தகைய கருத்துகளை பொதுவெளியில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற உள்ளார்ந்த அக்கறையுடன் சொல்லி இருக்கிறார்கள்.
* கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், இக்கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக, கல்விச் சேவையாகக் கருத வேண்டும்.
* மாணவச் செல்வங்கள், முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவை பெறவேண்டும். எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக வளர வேண்டும்.
* மாணவிகள், உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மாணவியர்க்கு பாலியல் ரீதியாகவோ, மனவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோதொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காது.
* எந்தச் சூழலிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக் கூடாது. தமிழ்நாட்டு மாணவ - மாணவியர் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்ல - உடலுறு தியும் மன தைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும்.
- என்பதுதான் குருநானக் கல்லூரியில் முதலமைச்சர் கூறிய அறிவுரை ஆகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள் என்றும், பிள்ளைகள் தங்கள் ஆசிரியர்களிடம் மனம் விட்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் - ஆசிரியர்கள்- பெற்றோர்கள் - மாணவ - மாணவியர் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் சென்றால்தான் இன்றைய நிலைமையைச் சீர்செய்ய முடியும்.
இன்றைய நிலைமை சிறப்பானதாக அப்போதுதான் மாறும். தனித்தனி தீவுகளாக சிறப்பாக இருப்பதால் எதனையும் சீர்செய்யமுடியாது. அனைத்துத் தீவுகளும் சிறப்பாக இருப்பதும்- அதற்குள் ஒருங்கிணைப்பு இருப்பதும் மிகமிக முக்கியமானது ஆகும். ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் இல்லாத இடத்தில் நன்மை விளையாது. அதனைத்தான் முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாகத் தான் பள்ளிமாணவர்களுக்கான மனநலம் - உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு முகாம்களை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. பள்ளிக் கல்வி வரலாற்றில் இது மைல் கல் ஆகும். கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலமான கடந்த இரண் டாண்டு காலத்தில் வீட்டில் இருந்தே கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டது.
இது மாணவ சமுதாயத்தின் மத்தியில் ஒருவிதமான மன அழுத்தம் ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிச் சூழல் என்பது மன ரீதியாக அந்நிய மான சூழலாக சிலரால் கருதப்படுகிறது. தேர்வு குறித்த பயம் அதிக மாகி உள்ளது. ஆசிரியர்களது அறிவுரைகள், கசப்பானதாக மாறிவிட் டன. சிறு கட்டுப்பாடும், மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
இதே போன்ற சில உளவியல் சிக்கல்கள் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. இரண்டையும் சரி செய்தாக வேண்டும். தாயுள்ளம் கொண்ட அரசுக் குத் தான் இத்தகைய சிந்தனைகள் வரும். அதை மனதில் வைத்து மனநலம் - உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு முகாம்களைநடத்த உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர்.
''மன நலன் - உடல் நலன் - ஆகிய இரண்டும் சரியாக இருந்தால் அனைத்து நலன்களும் சிறப்பாக இருக்கும். எப் போதும் சுறுசுறுப்பாக நீங்கள் இருக்க வேண்டும். சோர்வாக இருக்கக் கூடாது. சோம்பேறித்தனம் தான் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடை ஆகும். எதையும் நாளைக்குப் பார்த்துக்கொள் ளலாம், நாளைக்குப் படித்துக் கொள்ளலாம், நாளைக்கு எழு திக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.
நன்றாகசாப்பிடுங்கள் - நன்றாக உடல்நலனை பேணுங் கள் - நன்றாகப் படியுங்கள் - இது மூன்றும் தான் உங்களுக்கு நான் சொல்வது. முதலமைச்சராக அல்ல, உங்களது அப்பாவாக, அம்மா வாக, பெற்றோரில் ஒருவனாக நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
''கல்விக் கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக இல்லாமல், மதிப்புயர் கூடங்களாக மாற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இது மாபெரும் கனவு ஆகும். ஆட்சியியலை வெறும் அரசியலாக மட்டும் பார்க்காமல் அதனை அன்பியலாகப்பார்க்கிறார் முதலமைச்சர் என்பதன் அடையாளம் தான் அவரது உரைகள். நாடு வாழ, வேறு என்ன வேண்டும்?!
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!