murasoli thalayangam
“அ.தி.மு.க ஆட்சியின் லட்சணத்தை விளக்க குட்கா விவகாரம் ஒன்றே போதும்” : பழனிசாமி கும்பலை சாடிய முரசொலி !
அ.தி.மு.க. (குட்கா பிரிவு) 2
குட்காவுக்கு எதிராக தி.மு.க. வலுவான போராட்டங்களை நடத்தி வருவதை உணர்ந்த அ.தி.மு.க. அரசு, அவர்களது முயற்சிகளுக்கு தடை போட நினைத்தது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது அன்றைய சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனையடுத்து சென்னையில் தி.மு.க. மேற்கொண்ட கள ஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டது. கிடைத்த ஆதாரங்களை சட்டமன்றத்தில் காட்டினார்கள். குட்காவை கொண்டு வந்து சபையில் காட்டியது தவறு என்றார்கள்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தனர். அதில் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது பழனிசாமி ஆட்சி ஆடிக்கொண்டு இருந்தது. 21 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதன் மூலமாக தான் பிழைக்கலாம் என்று பழனிசாமி சதி பின்னினார்.
இந்த நோட்டீஸுக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்றார் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு சட்டப்பேரவை உரிமை மீறல் குழு சார்பில் தி.மு.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் அ.தி.மு.க. ஆட்சி காலத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இரு டி.ஜி. பி.க்கள் பெயர்கள் இருந்தன. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர் இடம்பெறாத வகையில் அதிமுக ஆட்சி காப்பாற்றியது. இடை நிலை ஊழியர்கள் பெயரே இடம் பெற்று இருந்தது. அவர்களை மாட்டிவிட்டு அ.தி.மு.க. அமைச்சர் தப்பிக்கப்பார்த்தார்.
* அ.தி.மு.க. அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்துறை அனுப்பி இருந்தது. அந்த ஆவணங்களையே காணாமல் ஆக்கினார்கள். மிஸ்ஸிங் ஆகிவிட்டது என்று சொன்னார்கள்.
* குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார். அவர் இருந்தால் இந்த வழக்கை முறையாக நடத்தி விடுவார் என்று பயந்து தூக்கி அடித்தது அ.தி.மு.க. ஆட்சி.
* லஞ்ச ஒழிப்புத்துறைக்கு டி.ஜி.பி. தகுதியில் இயக்குநர் நியமிக்காமல் காலம் கடத்தி வந்தது அ.தி.மு.க. ஆட்சி.
* உயர்நீதிமன்ற ஆணையின் படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே.ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். 5 மாதங்களில் மாற்றப்பட்டார்.
* உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டார். ஆனால் நவம்பர், 2018ல் சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி.,க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. ஆறு பேர் மீது மட்டும் முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
* சிவக்குமார், செந்தில்முருகன் ஆகிய இரண்டு அரசு ஊழியர்கள் மீது 'வழக்குத் தொடர்' சி.பி.ஐ. அனுமதி கோரியது. அதற்கு அ.தி.மு.க. அரசு அனுமதி தரவில்லை. 20 மாதங்கள் கழித்து அதாவது 2020 ஜூலை மாதம் தான் அ.தி.மு.க. அரசு அனுமதி கொடுத்தது.
* அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீதான நடவடிக்கைக்கு அனுமதி இல்லை.
* எந்த அதிகாரிகள் மீது புகார் எழுந்ததோ, அவருக்கே பணி நீட்டிப்புதரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு பரிகாரம் தேட வழக்கு போட அவருக்கே அனுமதியும் தரப்பட்டது.
• அ.தி.மு.க. அரசில் கடைநிலை ஊழியராக இருந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்திலேயே உள்ள மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடி, தனக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்ய வழக்குப் போட அ.தி.மு.க. அரசே அனுமதி வழங்கியது. அதன்பிறகு கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது இந்த வழக்கு, சி.பி.ஐ.யும் இதில் ஆர்வம் காட்டாதது போல நடந்து கொண்டது. இந்த நிலையில்தான் இப்போது வேகம் பிடித்துள்ளது குட்கா வழக்கு.
முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோரும் காவல் துறை அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரும் உள்ளிட்ட 11 பேர்மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. டெல்லி சி.பி.ஐ.யின் 3 ஆவது லஞ்ச ஒழிப்பு பிரிவின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த 11 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு பதிய ஒன்றிய அரசின் உள்துறை அனுமதி தேவை என்பதால் மீதமுள்ள 9 பேருக்கு அனுமதி தந்துள்ளது தமிழ்நாடு அரசு,
அ.தி.மு.க. ஆட்சியின் லட்சணத்தை விளக்க இந்த குட்கா விவகாரம் ஒன்றே போதுமானது. குற்றவாளிகளைக் காக்கும் கும்பலாக பழனிசாமி கும்பல் இருந்துள்ளதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்.
Also Read
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!