murasoli thalayangam
‘உங்களில் ஒருவன்' : ஒரு தனிமனிதரின் வரலாறு அல்ல; ஒரு இயக்கம், இனம், நாட்டின் வரலாறாக அமையப்போகிறது!
உங்கள் வீட்டுக்கு விளக்காவேன்;நாட்டுக்குத் தொண்டனாவேன்;மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன்;மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்!" - என்று உறுதியெடுத்து - உழைப்பு; உழைப்பு; உழைப்பு ஆகிய மூன்றை மட்டுமே இலக்காகக்கொண்டு உயர்ந்து நிற்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் -இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! அவரது தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்' - முதல் பாகம் இன்றுவெளியாக இருக்கிறது. அகில இந்தியாவின் முகங்கள் அந்த விழாவில் அணிவகுக்கக் காத்திருக்கின்றன.
அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி அவர்கள் வருகை தர இருக்கிறார்கள். கேரள மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களில்ஒருவருமான பினராயி விஜயன் அவர்கள் வருகை தருகிறார். தெற்கின்பிரதிநிதியாக இவர் இருக்க - இந்தியாவின் இன்னொரு பாகத்தின் உச்சிப்பகுதியில் இருந்து உமர் அப்துல்லா வருகிறார். வட இந்திய மாநிலங்களின் பிரதிநிதியாக பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வீ வருகிறார். தமிழ்இலக்கியத்தின் அடையாளமாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், திரையுலகத்தின் பங்களிப்பாக மானமிகு சத்யராஜ் அவர்களும் பங்கேற்கிறார்கள்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் - மாணவப் பருவத்தில் இருந்து கழகம் வளர்க்கும் சொல்லேருழவர் துரைமுருகன் அவர்கள்தலைமை வகிக்க - சென்னையைக் கழகத்தின் கோட்டையாக வளர்த்தெடுத்து,டெல்லியில் கழகத்தின் கொடியை நிலைநாட்டி வரும் - கழகப் பொருளாளர்டி.ஆர்.பாலு அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். கவிஞரும் - எழுத்தாளரும் -செயற்பாட்டாளருமான கனிமொழி எம்.பி. அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்கள்.
இந்தப் பட்டியலைப் பாருங்கள். இதன் கூட்டுச் சேர்க்கை தான் தலைவர் -முதல்வர் ஸ்டாலின் அவர்கள். கழகமும் - தமிழகமும் - இந்தியாவும் - கலையுலகமும் சேர்ந்த கூட்டுச் சேர்க்கைதான் தலைவர் - முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.அவர் தான் ஒரு முறை சொன்னார். "14 வயதில் கோபாலபுரம் இளைஞர்தி.மு.க.வை ஆரம்பித்து மக்கள் பணியாற்றத் தொடங்கியவன் நான். இந்தஐம்பது ஆண்டு காலத்தில் தமிழகத்தில் என் கால் படாத கிராமம் இல்லை!பயணம் செல்லாத நகரம் இல்லை! இந்த அரை நூற்றாண்டு காலத்தைதமிழ்நாட்டு மக்களோடு கழித்தவன் நான்!'' என்று சொன்னார். இப்படிமக்களோடு மக்களாக ஒன்று கலந்து விட்ட ஒரு தலைவர் எப்படி உருவானார்என்பதை இந்தச் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டாமா?அதை மற்றவர் எழுதுவதை விட அவரே எழுதியதுதான் தனிச்சிறப்பு. 95 வயது வரையில் இந்த சமூகத்துக்காக உழைத்த தந்தை பெரியார் தனது வரலாற்றை தானேஎழுதாதது ஒரு மிகப்பெரிய குறையே. ‘நானே எழுதிய சுயசரிதை' என்று மிகச் சிறுநூலை மட்டுமே அவர் எழுதினார்.
அது 1917 ஆம் ஆண்டு அவர் காங்கிரசுக்கட்சிக்குள் நுழைவது வரையிலான வரலாறு ஆகும். அதன்பிறகு தான் அவரதுஎழுச்சி வாழ்க்கை தொடங்குகிறது. அதேபோல், பேரறிஞர் அண்ணா அவர்களும்தன் வரலாற்றை எழுதவில்லை. தன் வரலாற்றுக் குறிப்புகள் போல், அவரதுஎழுத்துக்களில் இருந்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு நூல் வெளியானது. இந்த இருவரும் செய்யாமல் விட்டதை தமிழினத் தலைவர் - முத்தமிழறிஞர்கலைஞர் அவர்கள் நிறைவு செய்தார்கள். அவரது ‘நெஞ்சுக்கு நீதி' - ஆறுபாகங்களும் அவரது வரலாற்றை மட்டுமல்ல - கழக வரலாறு என்பதைத் தாண்டி -தமிழக, இந்தியா முழுமைக்குமான வரலாறாகவும் - சில இடங்களில் உலகவரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டுவதாகவும் அமைந்திருந்தது.அவருமே அந்த தன் வரலாற்றை முழுமையாக இறுதி வரையிலும் எழுதவில்லை.இன்றைய காலக்கட்டத்தின் தன் வரலாற்று நூல்கள் மிகமிக முக்கியமானவை. வாழ்ந்த காலத்திலேயே வரலாறுகளை திரித்தும் மறைத்தும்சொல்லிப் பரப்பும் கயமை மனிதர்கள் பெருகிவிட்ட காலத்தில் - தன் வரலாற்றுவாக்குமூலங்கள் மிகமிக முக்கியமானவை. அந்த வகையில் தலைவர் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தன் வரலாற்று நூல் முக்கியத்துவம்பெறுகிறது.1953 மார்ச் 1 அன்று தலைவர் - முதல்வர் அவர்கள் பிறந்தார்கள்.
1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தின் படி கைது செய்யப்பட்டார்கள். இந்த 23ஆண்டுகளுக்குள் அவரது வாழ்வில் நடந்த சுவடுகளைத் தான் ‘உங்களில் ஒருவன்'முதல் பாகமாக எழுதி இருக்கிறார். 23 வயதுக்குள் என்ன நடந்திருக்க முடியும்?என்று சிலர் கேட்கலாம். அவரது வாழ்க்கையில் எல்லாமே நடந்திருக்கிறது.13-14 வயதில் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டுசிறு அமைப்பைத் தொடங்கி - அதற்கு 'கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.' என்றுபெயர் சூட்டி இருக்கிறார். 16 வயதில் அந்த அமைப்புக்கு சிறு அலுவலகம்திறந்திருக்கிறார். 1967 தேர்தலில் ‘உதயசூரியனுக்கு வாக்குக் கேட்டு'ச்செல்லத் தொடங்கி விட்டார். 1971 தேர்தலில் ‘முரசே முழங்கு' நாடகம்அரங்கேறிவிடுகிறது. 1974 ஆம் ஆண்டு கழகத்தின் அமைப்புப் பொறுப்புகளுக்குள் வந்துவிடுகிறார். அதற்கு அடுத்த ஆண்டு ‘திரையுலகத்தில்'நுழைந்து படம் தயாரிக்கத் தொடங்கி விடுகிறார். அதே ஆண்டு திருமணமும்நடக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டு மிசாவில் கைது. இத்தகைய அத்தனைதிருப்பங்களும் அவருக்கு 23 வயதுக்குள் படிப்படியாக நடக்கிறது.இப்படி மேலோட்டமாக அறிந்த செய்திகளின் முழுமையான காட்சிகளைதலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே விவரிப்பது என்பது காலத்தின் கட்டளையாகும்.காலத்தின் கடமை ஆகும்.அப்பா தலைவராக இருந்தார் - அவருக்குப் பின்னால் மகன் வந்தார் - என்றுஐம்பதாண்டுப் பொதுவாழ்க்கைக்குப் பின்னாலும் அவரது வளர்ச்சியைஉதாசீனப்படுத்த நினைக்கிறார்கள்.
தியாகத்தால் உரிமை பெற்று - உழைப்பால்தலைவரானவரின் தன் வரலாற்று நூலாக அது அமையப் போகிறது.‘வரலாற்றில் தனிமனிதர்கள் வகிக்கும் பாத்திரம்' என்பது மிகமிக முக்கியமானது. தனிமனிதர்களின் கூட்டுச் சேர்க்கைதான் சமூகத்தின் வரலாறு ஆகும்.‘என் சரித்திரம்' என்பது உ.வே.சாமிநாதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழிலக்கியவரலாறுதான். திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்பது அவரது வாழ்க்கைமட்டுமல்ல, தமிழக அரசியல் - தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறு ஆகும். கோவைஅய்யாமுத்துவின் ‘என் வரலாறும்' , நாமக்கல் கவிஞரின் ‘என் கதை'யும்தமிழகத்தில் தேசியவிடுதலையின் முழு எழுச்சியைச் சொல்வது. அதேபோல் இராம.அரங்கண்ணலும், வீரபாண்டியாரும் எழுதிய வரலாறுகள் என்பவை கழகத்தின்வரலாறுகளாக அமைந்துள்ளன. இத்தகைய பல நூறு நூல்களைச் சேர்த்தால் அதுசமூக - அரசியல் - பண்பாட்டு வரலாறாக மாறும்.அந்த வகையில் ‘உங்களில் ஒருவன்' - ஒரு தனிமனிதரின் வரலாறு அல்ல.ஒரு இயக்கம் - ஒரு இனம் - ஒரு நாட்டின் வரலாறாக அமையப் போகிறது.இன்று ‘உங்களில் ஒருவன்' பிறக்கிறது. அந்நூலை வாழ்த்துவோம்!""""எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும்-ஏளனத்துக்கு ஆளானாலும்-எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடச்சித்தமும் விடாமுயற்சியும்இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்.தூற்றினோரே துதிபாடி நிற்பர்.ஏளனம் பேசினோர் ஏந்தி ஏந்தி தொழுவர்"" - என்றார் அண்ணா. அப்படித்தான்கழகத் தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டும்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!