murasoli thalayangam
“சனாதனம் இருக்கும் வரை பெரியாரின் கொள்கையும் ஒலிக்கும்” - முரசொலி தலையங்கம்
“பெரியார் அவர்தம் வாழ்நாளில் கிளர்ச்சி, போராட்டம், சிறை என்பதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. பெரியார் தமது பரப்புரையின் இறுதியில், ‘நான் சொல்வதாலேயே இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. நான் சொல்வதைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையிருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்.
பெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவரின் கொள்கைகளோ அல்லது அவரது பணிகளோ பேசப்படும்போது ஆதிக்க சக்திகள் துடிதுடித்துப் போகின்றன.
1971 தேர்தலின்போது பெரியார் மாநாட்டின் ஊர்வலப் பிரச்னையைக் கிளப்பினார்கள். இப்போது இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதே முழக்கத்தை அதே பாணியில் கிளப்பியிருக்கின்றனர். நம்மை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்த ஓர் ஆதிக்கச் சக்தி தன் முயற்சியை ஒரு கனவானின் வழி தொடங்கி இருக்கிறது.
பெரியாரும் அவர் கொள்கையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பேசப்படுகிறது என்பது தொடர் நிகழ்மை. ஏனெனில், சனாதனம் இருக்கும் வரையும் அந்நிகழ்மை இருந்தே தீரும். ஆகவே, பெரியார் மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார். வாழ்வார். முரசொலியும் ஒலித்துக்கொண்டே இருக்கும்”என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!