murasoli thalayangam
"உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி; சட்டமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி"- முரசொலி தலையங்கம்!
கடந்த 2016-ம் ஆண்டு நடக்கவேண்டிய உள்ளாட்சி தேர்தல் 2019-ம் டிசம்பரில் நடைபெறுகிறது. இதனை நடத்தாமல் இருப்பதற்கு எத்தனையோ பொய்க் காரணங்களை அ.தி.மு.க அரசு சொல்லி வந்தது.
ஆனால் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தலையில் குட்டியதால், வேறு வழியின்றி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்தான் மக்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.
மத்திய – மாநில அரசின் திட்டங்கள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளின் வழியாகத்தான் மக்களிடையே சொல்லும். அதனால் தான் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என மகாத்மா காந்தி கிராமப்புற ஆட்சி குறித்து தெரிவித்தார். ஆனால் இன்றைய மத்திய – மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கான அரசுகளாக மாறிவிட்டன.
குறிப்பாக அரசியல் சுயநல நோக்கம் மட்டுமே எடப்பாடி அரசுக்கு இருக்கிறது. அதனால் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் நடைபெறும் இந்த உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது.
உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாநிலத்தில் நடக்கும் ஊழலாட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலமாக 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமைய வேண்டும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!