murasoli thalayangam
“வஞ்சகமும் வன்மையும் நிறைந்த தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம்” – முரசொலி தலையங்கம் !
குடியுரிமைச் சட்டம் கடந்த 1955-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
முன்னர் கொண்டுவந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் ஏதுமில்லை என்றாலும், இந்தியாவில் 7 ஆண்டுகள் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்றும் தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களும், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க மற்றும் இடதுசாரி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை பா.ஜ.க-வுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக இன்றிலிருந்து இரண்டு, மூன்று நாட்களில் நிறைவெற்றிவிடுவார்கள். அதில் சந்தேகமில்லை.
ஆனால் இதன் நோக்கம் கண்டிப்பாக நிறைவேறாது. அதில் வஞ்சகமும் வன்மையும் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினரை இரண்டாந்தர குடிமக்களாக்க நினைக்கும் போக்கும் இடம்பெற்று இருக்கிறது. அரசு சட்டம் நிறைவேற்றலாம்; அது நிறைவேற்ற மக்கள் துணை நிற்க வேண்டுமே. ஆக, இந்தச் சட்டம் நிறைவேறுவது நமக்குக் கவலை அளிக்கிறது என இன்றைய முரசொலி நாளேட்டின் தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!