M K Stalin

அரியலூர், பெரம்பலூரில் ரூ.173.96 கோடியில் 21,862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் !

அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.87.94 கோடி செலவிலான 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.120.04 கோடி மதிப்பீட்டிலான 53 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.173.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 21,862 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2024) அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மாவட்டத்தில் 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,141 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 80 கோடியே 60 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 103.22 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

=> அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் :

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தவுத்தாய்குளம், புதுப்பாளையம், வெங்கனூர், மணப்பத்தூர், தளவாய், இடையக்குறிச்சி, அணிக்குதிச்சான், அம்பாபூர், கடம்பூர், குணமங்கலம், ஸ்ரீபுரந்தான், இருகையூர், வேம்புகுடி, நடுவலூர், வெண்மான்கொண்டான், சுத்தமல்லி ஆகிய ஊராட்சிகளில் 2 கோடியே 25 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;

புதுப்பாளையம், காமரசவல்லி-மாத்தூர், அயன்தத்தனூர், குழுமூர், காசான்கோட்டை, வாழைக்குறிச்சி- மதனத்தூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் 2 கோடியே 57 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

வஞ்சினபுரம், சன்னாசிநல்லூர், கீழமாளிகை, சிறுகடம்பூர், பரணம், இறவாங்குடி, முத்துசேர்வாமடம், தத்தனூர், பிச்சனூர், இலையூர், கவரபாளையம், அணிக்குதிச்சான், கீழநத்தம் ஆகிய ஊராட்சிகளில் 4 கோடியே 65 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள்;

தாமரைக்குளம், பரணம், காடுவெட்டாங்குறிச்சி, கார்குடி மற்றும் உதயநத்தம் ஆகிய ஊராட்சிகளில் 64 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள்;

ஸ்ரீபுரந்தான் ஊராட்சி - ஸ்ரீபுரந்தான் கிழக்கு, கோவிந்தபுத்தூர் ஊராட்சி – அய்யனார் கோவில் ஆகிய இடங்களில் 33 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய சேமிப்பு கிடங்கு கட்டடங்கள்;

ஸ்ரீராமன் ஊராட்சியில் 23 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம்; அரியலூரில் 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட வள மையக் கட்டடம்; அணிக்குதிச்சான் ஊராட்சியில் 35 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலைய கட்டடம்; செந்துறை ஊராட்சியில் 20 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடம், மேலக்கருப்பூர் ஊராட்சியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு மையக் கட்டடம்; இராயம்புரம் ஊராட்சி-காவேரிப்பாளையத்தில் 16 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என 12 கோடியே 71 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவிலான 48 முடிவுற்ற பணிகள்;

பொதுப்பணித்துறை சார்பில், கீழப்பழுரில் 2 கோடியே 32 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட நகர்புற ஊரமைப்பு மற்றும் திட்டமிடல் அலுவலகக் கட்டடம், திருமானூரில் 30 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம், உடையார்பாளையம் வட்டம், தா.பழூரில் 1 கோடியே 89 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்;

என மொத்தம், 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

=> அரியலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் :

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், திருச்சி -சிதம்பரம் சாலை முதல் சில்லக்குடி சாலை வரை 1 கோடியே 88 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாடுப் பணிகள், திருச்சி - சிதம்பரம் சாலை, சில்லக்குடி சாலை முதல் மேலப்பழூர் சாலை வரை 68 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள், பரணம் ஊராட்சி, பரணம் வடக்கு மற்றும் செந்துறை ஊராட்சி, நெய்வனம் ஆகிய இடங்களில் உள்ள ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

பள்ளிக்கல்வித் துறை சார்பில், இலையூர், சிலம்பூர், வெற்றியூர், த.சோழன்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளிகளில் 7 கோடியே 48 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடங்கள், மாணவ, மாணவியர்களுக்கான கழிவறைகள், குடிநீர் வசதி; ஏலாகுறிச்சி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 94 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வகுப்பறைக் கட்டடம், பொன்பரப்பி, ஜெ.சுத்தமல்லி, ஆண்டிமடம், உதயநத்தம், கரு.பொய்யூர், அழகாபுரம், கீழகாவட்டான்குறிச்சி, இலந்தைகூடம், திருபுரந்தான், குருவாடி, பெரியதிருக்கோணம், காரைகுறிச்சி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நாகமங்கலம், சிலால், குணமங்கலம் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 24 கோடியே 23 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடங்கள், கழிப்பறைகள், சுற்றுசுவர்கள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் உடையார்பாளையம் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்;

- என மொத்தம், 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

=> அரியலூர் மாவட்ட பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் :

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 573 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 11 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, 19 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, 45 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 20 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணத் தொகை, தாட்கோ சார்பில் பயனாளிகளுக்கு சுமை வாகனம், பயணியர் ஆட்டோ, கறவை மாடு மற்றும் ஆடு வளர்ப்பு போன்ற திட்டங்களில் உதவிகள், மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் ஒப்பளிப்பு ஆணைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள், இலவச வீடுகள் வழங்குதல், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் பேட்டரி தெளிப்பான்கள், முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், பருத்தி மற்றும் நெல் நுண்ணூட்டம், மண்புழு உரப்பை, ஒருங்கிணைந்த பண்ணையம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவரி மேம்பாட்டுத் திட்டம், தானியங்கி நெல் நாற்று நடவுசெய்யும் இயந்திரம், டிராக்டர்கள், பவர் டில்லர்கள், சுழற்கலப்பைகள், விசை களையெடுக்கும் கருவிகள், ரோட்டாவேட்டர்கள், மின்மோட்டார் வழங்குதல், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி, வங்கிக் கடனுதவி, திறன்பேசிகள் வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் 0-6 மாத மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு பெட்டகங்கள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 70 கோடியே 73 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,141 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

=> பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் :

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பெரம்பலூர் அண்ணா நகர் வார்டு எண்.15-ல் (அரசு மருத்துவமனை எதிரில்) 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலம், துறைமங்கலம் வார்டு எண்.21-ல் 22 இலட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி கட்டடம்;

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 17 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் குறுவட்ட அளவரின் குடியிருப்புடன் கூடிய அலுவலகம்;

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வேப்பந்தட்டை அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர்களுக்காக 100 மாணவிகள் தங்கும் வசதியுடன் 4 கோடியே 19 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் கொளக்காநத்தத்தில் 1 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவிலும், வாலிகண்டபுரத்தில் 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 2 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் குன்னத்தில் 7 கோடியே 79 இலட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம்;

இயற்கை வளங்கள் துறை சார்பில் காரை கிராமத்தில் 7 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலி, அருங்காட்சியகம், பாதுகாவலர் அறை, கண்காணிப்பு கோபுரம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIல் 3 கோடியே 20 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் 45 முடிவுற்ற பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 96 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 65 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் 5 முடிவுற்ற பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 1 கோடியே 46 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகள், நமக்கு நாமே திட்டத்தில் 1 கோடியே 20 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் 6 முடிவுற்ற பணிகள், நபார்டு சாலை திட்டத்தில் 9 கோடியே 37 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் 4 சாலைப் பணிகள், தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 60 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 2 கோடியே 62 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் 5 முடிவுற்ற பணிகள், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 4 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் 22 முடிவுற்ற பணிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களில் 2 கோடியே 13 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் 29 முடிவுற்ற பணிகள், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் 2 கோடியே 50 ஆயிரம் ரூபாய் செலவில் 29 முடிவற்ற பணிகள், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தில் 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகள், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் 3 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகள், 15-வது நிதிக்குழு மானியத் திட்டங்களில் 5 கோடியே 87 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் 186 முடிவுற்ற பணிகள், மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தில் 93 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் 43 முடிவுற்ற பணிகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் சார்பில் 3 கோடியே 5 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 55 முடிவுற்ற பணிகள்;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் களரம்பட்டி மற்றும் தம்பிரான்பட்டி ஆகிய இடங்களில் 22 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;

கூட்டுறவுத் துறை சார்பில் அம்மாபாளையம், பெருநிலா, இலுப்பைக்குடி மற்றும் மாக்காய்குளம் ஆகிய இடங்களில் 45 இலட்சம் ரூபாய் செலவில் 4 நியாய விலைக் கடைகள்;

- என மொத்தம் 70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

=> பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் :

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல், பாலங்கள், குறுபாலங்கள் கட்டுதல், சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகள் என 20 புதிய திட்டப் பணிகள்;

கூட்டுறவுத் துறை சார்பில் 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய கட்டடம்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையக் கட்டடம் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஆய்வகம், வேப்பூர் மற்றும் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைகளில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள்;

பள்ளிக்கல்வித் துறை சார்பில் கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2 கோடியே 35 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடங்கள், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள்;

- என மொத்தம் 80 கோடியே 60 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

=> பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் :

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், பித்தளை தேய்ப்பு பெட்டி, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் நிதியுதவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரம், விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தில் உதவி, வருவாய்த் துறை சார்பில் 7000 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தில் 123 பயனாளிகளுக்கு உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 1514 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் உதவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உதவிகள், ஊட்டச்சத்து பெட்டகங்கள், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல், நுண்ணீர் பாசனம், நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு உதவிகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 103 கோடியே 22 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 11,721 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ. ராசா, அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பிரபாகரன், கே. சின்னப்பா, க.சோ.கா. கண்ணன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ. இரத்தினசாமி, இ.ஆ.ப., பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: ரூ.22 கோடியில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் 2ஆம் தொகுப்பு : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!