M K Stalin
அரசுத் திட்டங்களை செயல்படுத்திய அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு !
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு ஊழியர்களின் நலன் காத்திட என்றும் அரணாக விளங்கி வருவதோடு, அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் அகவிலைப்படி உயர்த்தி தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் அரசாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செய்லபடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் அரசு ஊழியர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டங்கள் தோறும் ஆய்வுப் பணி மேற்கொள்ள செல்லும் போதெல்லாம் சிறந்த முறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களை பாராட்டி சிறப்பித்து வருகிறார். கடந்த 6.11.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தின்போது, சிறப்பான முறையில் பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி சிறப்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2024) விருதுநகர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பாக, விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருது பெற மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் த. சீனிவாசன் மற்றும் துறை பணியாளர்களையும்;
விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை உயர்த்தியமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது பெற மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. இரா. தண்டப்ணி, மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலர் த. அனிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.அசோக்குமார் மற்றும் பணியாளர்களையும்;
இன்றையதினம் நடைபெறும் விருதுநகர் மாவட்ட அரசு விழாவில் முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அதிக அளவு பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்க சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் இரா. ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்களையும்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக விருது பெற சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் – கன்னிசேரிபுதூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு. ஆரோக்கிய ரூபன் ராஜ், வெப்பக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் மரு. செந்தட்டிகாளை, நரிகுடி வட்டார மருத்துவ அலுவலர் மரு. லஜா ஜெசிகா மற்றும் துறை மருத்துவர்கள், பணியாளர்களையும்;
விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளில் புதுமையாகவும் சிறப்பாகவும் பணியாற்றிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. இரா. தண்டபாணி, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர் ஜி. ராமராஜ் மற்றும் பொறியாளர்களையும்;
விருதுநகர் மாவட்டம், ந. சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிலப்பதிகாரம் முற்றோதல் செய்த மாணவிகளுக்கு பயிற்சி அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரிசல் இலக்கிய கழக தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., கரிசல் இலக்கிய கழக செயலாளர் மரு. அறம் மற்றும் ஆசிரியர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!