M K Stalin
“‘அப்பா..’ ❤️நிறைவான நாள்..” - விருதுநகர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு - பின்னணி?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் (நவ.09, 10) ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு நேற்று (நவ.09) விருதுநகரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதோடு, மக்களை சந்தித்து கலந்துரையாடினார். விருதுநகர் சென்ற முதலமைச்சருக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த சூழலில், விருதுநகர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அரசினர் குழந்தைகள் காப்பகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து, காப்பகத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றார்.
அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் எனும் பெயரில் செயல்பட்டு வரும் அந்த காப்பகத்திற்கு செல்லும் வழியில் சூலக்கரை மேட்டில் உள்ள கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேக், பிஸ்கட்டுகள் மற்றும் அருகில் இருந்த பழக்கடையிலிருந்து பழங்களையும் வாங்கிச் சென்று மாணவியர்களுக்கு வழங்கினார்.
அங்கு அந்த குழந்தைகளுக்கு நடத்தப்படும் யோகா பயிற்சி வகுப்பை பார்வையிட்டு கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி பேசும்போது, "'சி.எம்.'யை (முதலமைச்சர்) நேரில் பார்ப்பது என்பது ரொம்ப கடினம். நம்மைபோன்று யாரும் இல்லாத மாணவர்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சி.எம்-மே நேரில் பார்க்க வந்திருக்கிறார்.
சி.எம்.யை நேரில் பார்க்க நாம் ரொம்ப ஆசைப்படுவோம். அது ஆசையாகவே போய்விடும் என்று நினைத்தோம். ஆனால் அவங்களே நம் பக்கத்தில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நம்மை பார்க்க வந்தது மட்டுமில்லாமல், அவருடைய குழந்தைகள் போன்று நினைத்து நமக்கு 'ஸ்வீட்' வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்கள். இதை நம்மால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்பா என்று சொன்னவுடன் அந்த சிரிப்பு..." என்று பேசி உணர்ச்சிவயப்பட்டார். பின்னர் அந்த மாணவியின் தோளில் தட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசுவாசப்படுத்தினார்.
மேலும் அந்த மாணவியின் பேச்சை கைத்தட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரசித்தார். அங்கு பணியாற்றும் ஆசிரியைகள், பணியாளர்கள் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
'இந்த காப்பகத்தில் இருந்து புறப்படும் போது குழந்தைகளின் கண்ணத்தை வாஞ்சையுடன் தடவி நான் புறப்படுகிறேன். இந்த பக்கம் வந்தால் மீண்டும் உங்களை சந்திக்க வருகிறேன்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதற்கு குழந்தைகள் அனைவரும், "பாய் அப்பா..." என்று சொல்லி கைகளை காட்டினார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவர்களை நோக்கி கையை அசைத்து புறப்பட்டு சென்றார்.
இந்த உணர்ச்சிமிகு சந்திப்பு நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இணைந்து, 'அப்பா..' 'நிறைவான நாள்' என்ற வாசகத்துடன் இருதய குறியீட்டையும் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
234 தொகுதிகளிலும் ஆய்வுகள் நிறைவு! : ஆய்வு அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் தகவல்!
-
இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : பெரும்பான்மை பெறுவாரா அதிபர் அநுர குமார திசநாயக்கே ?
-
தொழுவதற்கு உரிமை கேட்ட இடத்தில் தொடுவதற்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திமுக - திருச்சி சிவா MP பேச்சு !
-
உயர்நீதிமன்ற வளாகத்தில் அர்ஜுன் சம்பத் மகன் கைது! : வெறுப்பு பேச்சு சர்ச்சையானதையடுத்து நடவடிக்கை!
-
வான்புகழ் வள்ளுவருக்கு 133 அடியில் சிலை எழுப்பி 25 ஆண்டுகள் நிறைவு : கலைஞரின் செயல்களை விவரித்த முரசொலி !