M K Stalin
செங்கல்பட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு - உற்பத்தி மைய விரிவாக்கம்! : Lincoln Electric ரூ. 500 கோடி முதலீடு!
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு உலக முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் நடத்தப்பட்டு சில வாரங்களில் அதற்கான வேலைப்பாடுகளும் மும்முரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், உலக முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது குறு, சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையவும், தமிழ்நாடு அரசு உதவுப்பூண்டு வருகிறது.
அவ்வகையில், மேலும் பல முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு நாளும் பல கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு, ஒப்புதல் அளித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக லிங்கன் எலக்ட்ரிக் (lincoln Electric) நிறுவனத்திடனும் ரூ. 500 கோடி முதலீடு பெற்றுள்ளது தமிழ்நாடு அரசு.
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் (Lincoln Electric)
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளில் உள்ள 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 42 உற்பத்தி இடங்களை உள்ளடக்கிய உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை அலுவலகங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
முதலமைச்சர் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், லிங்கன் எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவபாதசுந்தரம் காஜா, முதுநிலை துணைத் தலைவர் திரு. கிரெக் டோரியா மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!