M K Stalin
Trilliant நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடக்க அழைப்பு விடுத்து வருகிறார். அவரின் அந்த முயற்சி காரணமாக உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகின.
அந்த வகையில் தற்போது Trilliant நிறுவனத்துடன் 2000 கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "Trilliant நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை நிறுவிட 2000 கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டேன். இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி!
Nike உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு, உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டேன்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆப்டம் (Optum) நிறுவனத்தில் 5,000 பேர் வேலை செய்து வரும் நிலையில், அந்நிறுவனம் சுகாதாரத் துறைக்கான திறமையாளர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். முன்னெடுப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!