M K Stalin
பசிக்கொடுமையை எந்த சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாது : வாழை படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
’பரியேறும் பெருமாள்’ என்ற முதல் படத்திலேயே தனித்துவமான திரைமொழியை வெளிப்படுத்தி இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மாரி செல்வராஜ். பிறகு நடிகர் தனுஷை வைத்து ’கர்ணன், உதயதி ஸ்டாலினை வைத்து :மாமண்ணன்’ படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றது.
சினிமாவில் குறைவாக பேசப்பட்டு வரும் சாதிய முரண்பாடுகளையும், பாகுபாடுகளையும் தனது படத்தின் மைய கதையாக வைத்து தனது படைப்புகளை கொடுத்து வருகிறார் மாரி செல்வராஜ்.
அந்த வரிசையில்தான், உண்மை சம்பவத்தை அடிப்படையாகவும், சிறுவயதில் சந்தித்த அனுபவங்களை வைத்தும் 'வாழை' படத்தை மக்களுக்கு கொடுத்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது.. சினிமா பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் இவரை அனைவரையும் இந்த ’வாழை’ படம் கண் கலங்கவைத்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’வாழை’ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்.தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!