M K Stalin
“முதலமைச்சரின் வருகைக்காக விழாக்கோலம் பூண்டிருக்கிறது சிகாகோ!” : அமெரிக்க தமிழ் சங்கத்தினர் உற்சாகம்!
தமிழ்நாடு தொழில்துறையில் புதிய மைல்கல்லை எட்டவும், அமெரிக்க தமிழ் மக்களுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
அதற்காக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் மாபெரும் விழா நடத்த சுமார் 40க்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்கள் திட்டமிட்டு, 800க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் சரவணக்குமார் மணியன், “தமிழ்நாடு வளம் பெற முதலீடுகளை ஈட்டவும், புலம்பெயர் தமிழ் உறவுகளையும் சந்திக்கவும் அமெரிக்க வர இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க 40க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிகாகோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது” என்றும்,
தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் வீராவேணுகோபால், “சிகாகோ நகரத்திற்கு முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து கலந்துகொள்ள இருக்கிற விழாவை சிறப்பாக நடத்த, இதுவரை இல்லாத அளவில் 40க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் திவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். சிகாகோ மட்டுமல்லாது, அமெரிக்காவின் அனைத்து பகுதி தமிழ் மக்களும் விழாவில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது” என்றும்,
தமிழ்நாடு அறக்கட்டளையின் சிவா மூப்பனார், “தமிழ்நாடு தொழில்துறையிலும், முதலீட்டிலும் முதன்மை பெற, அயலகத் தமிழர்களை ஒன்றிணைத்திட, வட அமெரிக்கத் தமிழர்களை சந்திக்க மற்றும் வாழ்த்தி உயர்த்திட, 10ஆவது உலகத் தமிழ் மாநாடு கண்ட சிகாகோ மாநகரத்திற்கு வட அமெரிக்க தமிழர்கள் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அன்புடன் வரவேற்கிறோம்” என்றும் காணொளி வாயிலாக தங்களது உற்சாகத்தை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!