M K Stalin
18,720 பெண் பணியாளர்களுக்காக... இந்தியாவிலேயே முதல்முறை... பிரம்மாண்ட தங்கும் விடுதி திறப்பு !
தொழில் முன்னேற்றத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதனாலே இங்கு பல்வேறு நாடுகள் முதலீடு செய்ய முனைப்பு காட்டுகின்றனர். அந்த வகையில் அண்மையில் கூட I Phone-ஐ தொடர்ந்து I Pad உற்பத்தியையும் தமிழ்நாட்டில் தயாரிக்க Foxconn நிறுவனம் முடிவு செய்தது.
இந்த சூழலில் தற்போது Foxconn நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.706.50 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.17) திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திரும்பெரும்புதூர் வல்லம் - வடகால் கிராமத்தில் SIPCOT தொழிற்பேட்டை வளாகத்தில் மெகா தங்கும் விடுதி கட்டப்பட்டு வந்தது. இந்த சூழலில் இன்று இது திறக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு Foxconn நிறுவனத் தலைவர் யங் லியு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ரூ.706.50 கோடியில் 10 மாடிகள் கொண்ட இந்த மெகா தங்கும் விடுதியில் 13 பிளாக்குகளில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பிளாக்குகளிலும் 240 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 6 படுக்கை வசதிகள் உள்ளன. அதே நேரத்தில் 4,000 பேர் அமரக்கூடிய உணவகம், குடிநீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிப்காட் குடியிருப்பு வளாகத்தில் விளையாட்டு மைதானம், உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதன்முறையாக 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தங்கும் விடுதியை அமைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!