M K Stalin
பட்ஜெட்டில் இதையெல்லாம் ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்... - பட்டியலிட்டு முதலமைச்சர் கோரிக்கை !
புதிய NDA கூட்டணி ஒன்றிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், 2-ம் முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று (ஜுலை 21) ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு ஏறத்தாழ 6 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புவதாக பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024-இல்,
* மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதி
* தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்
* பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு
* கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்
* தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு
* கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல்
- உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!