M K Stalin

கள்ளக்குறிச்சி விவகாரம் : பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு நிவாரணம் அறிவிப்பு !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசிய உரையில், "கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பாதிக்கப்பட்டு குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் அவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் நிதியோடு பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

பெற்றோர் இதுவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாழும் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு படிக்க கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினமும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்

பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பு வளர அவர்கள் 18 வயது நிறைவேற்றும் வரை மாத பராமரிப்பு தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணம் தொகையாக அவர்களின் பெயரின் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரணத்தில் இருந்து நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும்.அவர்களது 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் வட்டியுடன் அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும்.

பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மூன்று லட்ச ரூபாய் தமிழக அரசு வழங்கும். பெற்றோர் இருவரை அல்லது ஒருவரை இழுந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் முன்னுரிமை உடன் முதலில் வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அரசு அல்லது அரசு நிதி பெறும் இல்லங்களிலோ விடுதியில் சேர்க்கப்படுவார்கள்"என்று கூறியுள்ளார்

Also Read: கள்ளக்குறிச்சி விவகாரம் : பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!