M K Stalin
ஜூன்4 : வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை - முதலமைச்சர் அறிவுறுத்தல் !
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்த நிலையில், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாஜகவுக்கு எதிராக மக்கள் இருப்பதால், பாஜகவினர் பல தில்லுமுல்லுகள் செய்து இந்த தேர்தல் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. எனவே வாக்கு இயந்திரங்கள் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜுன் 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகளை கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
* வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் ஆளாகவும், இறுதியாக வெளியேறும் ஆளாகவும் நம்முடைய கழக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இருக்க வேண்டும்.
* தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தபால் வாக்குகள் இரண்டு வகைப்படும். 1. ETPBS, 2. சாதாரண தபால் வாக்கு.
* அதற்குரிய வழிமுறைகளை உங்களுக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி செல்லாத வாக்குகளை செல்லத்தக்கதாகவும், செல்லத்தக்க வாக்குகளை செல்லாததாகவும் அறிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
* எப்படி EVM வாக்குகள் முக்கியமோ, தபால் வாக்குகளும் மிக முக்கியமானவை. எனவே, அந்த எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
* வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகளில் மட்டும்தான் துவங்க வேண்டும். முதல் அரை மணி நேரம் கழித்துத்தான் EVM வாக்கு இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும்.
* தபால் வாக்குகள் எண்ணிக்கையை என்ன காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் துரிதமாக எண்ணி அதனுடைய முடிவுகளைத் தருவதை உறுதிசெய்ய வேண்டும்.
* EVM இயந்திரங்களை எண்ணுவதற்கு முன்பாக அந்த EVM இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* இயந்திரங்களின் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு, இயந்திரத்தின் எண்கள் சரியாக இருக்கிறதா என்பதை படிவம் 17C-இல் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* 17C படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் EVM இயந்திரத்திலும் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிறகு, வாக்குப் பதிவு துவங்கிய நேரம் மற்றும் முடிவுற்ற நேரத்தை EVM இயந்திரத்தில் பார்த்து, சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* இவற்றில் ஏதாவது ஒன்றில் சீல்கள் கிழிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயந்திர எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ, பதிவான வாக்குகள் ஒத்துப்போகவில்லை என்றாலோ, வாக்குப் பதிவு நேரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தாலோ, வாக்கு எண்ணிக்கைக்கு அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
* வாக்கு எண்ணிக்கை முகவர்கள் குறிப்பாக RO Table-க்கு செல்லும் வாக்கு எண்ணிக்கை முகவர் இதுகுறித்த கையேடுகளையும், சட்டங்களையும் அறிந்தவராக இருத்தல் நலம்.
* வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து VVPAT இயந்திரங்களை எடுத்து அதில் உள்ள காகித வாக்குகளை எண்ணி, EVM இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* படிவம் 17C-இல் நிரப்பப்படும் வாக்குகள் சரியாக படிவம் 20-இல் எழுதப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* படிவம் 20-இல் எழுதப்பட்ட வாக்குகள் மொத்த வாக்குகளாக எண்ணப்படும்போது அல்லது கூட்டப்படும்போது அந்த எண்ணிக்கையில் ஏதும் தவறில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு, படிவம் 20-இல் அனைவரும் கையொப்பமிட்டு வெற்றிச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து வெளியே வர வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!