M K Stalin
”மண்ணையும் மக்களையும் காப்போம்”.. கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பேட்டி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(9.6.2023) காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு, ஆய்வுசெய்ய நேற்று இரவு திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.
2023-2024ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீர்வளத்துறையின் மூலம் கால்வாய்கள் சீரமைப்பு, ஏரிகள் புனரமைப்பு, அணைக்கட்டுகள் புதுப்பித்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்கள்உழவர்களையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் காவிரிபாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள்90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023-24ஆம் ஆண்டு திருச்சி மண்டலத்தை சார்ந்த பாசன ஆதாரங்களில் தூர்வாரப்படுகின்ற பணிகளின் விவரம்.
சேலம் மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பணிகளும், திருச்சி மாவட்டத்தில் 15.88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 பணிகளும், கரூர் மாவட்டத்தில் 6.48 கோடி ரூபாய்மதிப்பீட்டில் 38 பணிகளும், அரியலூர் மாவட்டத்தில் 3.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 பணிகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 39 பணிகளும்,தஞ்சாவூர் மாவட்டத்தில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 189 பணிகளும், திருவாரூர்மாவட்டத்தில் 12.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 111 பணிகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 பணிகளும், மயிலாடுதுறைமாவட்டத்தில் 8.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 51 பணிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகளும் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 10.00 கோடி மதிப்பீட்டில் 55 பணிகளும் என மொத்தம் 90 கோடி ரூபாய்மதிப்பீட்டில் 4773.13 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 691 பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொலைநோக்கு பார்வையோடு,நிகர சாகுபடி பரப்பினை உயர்த்தவும், நீர் ஆதாரங்களை சிறந்த முறையில்மேம்படுத்தவும், கால்வாய்கள், வாய்க்காய்கள், ஏரிகள் போன்றவற்றை புனரமைத்துபாதுகாக்கும் பணிகளை ஆண்டுதோறும் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடியில் உள்ள முதலை முத்துவாரி மற்றும்விண்ணமங்கலத்தில் உள்ள “சி” பிரிவு வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும்பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு :
தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி கிராமத்திலுள்ள முதலைமுத்துவாரி வடிகால்ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் 3.50 கி.மீ. தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும்பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்.
இத்தூர்வாரும் பணி மேற்கொள்வதால் சென்னம்பட்டி, குருவாடிப்பட்டி மற்றும்நாட்டாணி கிராமங்களில் மழையினால் ஏற்படும் வெள்ள சேதங்கள் தடுக்கப்படுவதோடு வண்ணாரப்பேட்டை கிராமத்திலுள்ள சுமார் 2,042 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில் உள்ள ”இ“ பிரிவு வாய்க்காலின் வேளாண்பொறியியல் துறை மூலம் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் 2.50 கி.மீட்டர் தூரம்மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இத்தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதால்பூதராயநல்லூர், விண்ணமங்கலம், தீச்சசமுத்திரம் மற்றும் வெங்கடசமுத்திரம் ஆகியகிராமங்களைச் சேர்ந்த 450 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தில் உள்ள கூழையாறு வடிகால் மற்றும் ஆலத்தூர் மற்றும் இலால்குடி வட்டத்தில் உள்ள இருதயபுரம் மற்றும் வெள்ளனூரில் நந்தியாறு வடிகாலில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு :
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள கூழையாற்றில் ரூ.194.80 இலட்சம் மதிப்பீட்டில் 7.79 கி.மீ தூரம்மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்ஆய்வு செய்தார். இவ்வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதால் மேட்டுப்பட்டி,திண்ணியம், செங்கரையூர் மற்றும் டி.கல்விக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நிலங்கள்வெள்ளப் பாதிப்பில் இருந்து தடுக்கப்படும்.
தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆலத்தூர் மற்றும் இலால்குடி வட்டங்களில் அமைந்துள்ள இருதயபுரம் மற்றும் வெள்ளனூர் கிராமங்களில்நந்தியாற்றின் நீரோட்ட பாதையில் உள்ள முட்செடிகளை முழுவதுமாக அகற்றி அதனை 5.90 கி.மீ. நீளம் தூர்வாரி இரு பக்கக் கரைகளையும் பலப்படுத்திட ரூ.194.25 இலட்சம்ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வுசெய்தார்.
இதன் மூலம், ஊட்டத்தூர், நம்புக்குறிச்சி, பெருவளப்பூர், காணக்கிளியநல்லூர்,வந்தலை கூடலூர், சங்கேந்தி மற்றும் வெள்ளனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5777ஏக்கர் பாசனப் பரப்புகள் வெள்ள பாதிப்பிலிருந்து தடுக்கப்படும்.
இந்த தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையவும் மற்றும் வெள்ளக்காலங்களில் விரைவில் தண்ணீர் வடியவும் ஏதுவாக இருக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள்திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களிடம்கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்த இடங்களில் விவசாயப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும்,கோரிக்கை மனுக்களை அளித்து தங்களது தேவைகளையும் முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2022-23 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் கால்வாய்களை தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணிகளும் துரிதமாக நடந்தது. மேட்டூர் அணை மிக சீக்கிரமாக மே மாதம் 24-ஆம் நாள் அன்று முன்கூட்டியே திறக்கப்பட்டது.
இருந்தாலும் தண்ணீர் வந்து சேருவதற்கு முன்பே 4ஆயிரத்து 964 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் அனைத்து தூர்வாரும் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டன.விவசாயிகளுக்கான இடுபொருட்களும், கூட்டுறவு வங்கி கடன்களும் முழுமையாக கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக 2021-22ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்கும் வகையில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையாக 2022-2023-ஆம் ஆண்டில் 5.36 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும் -13.53 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 41.45 இலட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. வேளாண் புரட்சியின் தொடர்ச்சியாக இது அமைந்தது.
இந்த ஆண்டும் இதே போன்ற திட்டமிடுதலை தமிழ்நாடு அரசு செய்தது. நீர்வளத்துறை மூலமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரத்து 773 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 96% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளும் சில நாட்களில் முழுமையாக முடிக்கப்படும்.
இத்தோடு வேளாண் பொறியியல் துறை மூலமாக 5 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 146 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 651 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 45 சதவிகித தூர்வாரும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக சிறிய கால்வாய்களை தூர்வாரும் பணிகள் 27.17 கோடி செலவில் ஆயிரத்து 433 கிலோமீட்டர் நீளமுள்ள மேற்கொள்ளப்பட்டது. 8.13 கோடி ரூபாய் செலவில் 25 எண்ணிக்கையிலான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கான குறிப்பிட்ட தேதியான ஜூன் 12 நாள் அன்று நான் மேட்டூர் சென்று அணையை டெல்டா பாசனத்திற்காக திறந்து வைக்க இருக்கின்றேன். சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்து காட்டியது போலவே, மேட்டூர் அணையின் நீர் காவிரி டெல்டா பகுதிக்கு வருவதற்கு முன்னதாகவே நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியபடி அனைத்து தூர்வாரும் பணிகளும் சிறப்பாக முடிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் டெல்டா விவசாயிகள் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதியதோர் சாதனை படைப்பார்கள் என உறுதியாக நம்புகின்றேன்.கழக ஆட்சியில் உற்பத்தி அதிகம் ஆகி இருக்கிறது. பாசனப் பரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. இவை அனைத்தும் வேளாண் துறையில் மாபெரும் புரட்சியைக் காட்டுகிறது. தூர்வாரும் பணியை தொடர்ச்சியாகச் செய்து மண்ணையும் மக்களையும் காப்போம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!