M K Stalin

விமானத்தில் பொதுமக்களோடு சாதாரண வகுப்பில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் புகைப்படம் !

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 1,10,039 வாக்குகள் பெற்று தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 43,642 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். அதேபோன்று நாம் தமிழர் கட்சி 7984 வாக்குகளும், தேமுதிக 949 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. மேலும் காங்கிரஸ், அதிமுகவைத் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் பெரும் வெற்றிக்கு இறுதிகட்டத்தில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மு.ஸ்டாலினின் பிரச்சாரம் பெரிதும் உதவியது. முதலமைச்சர் மு.ஸ்டாலினின் பிரச்சாரத்தில் அலைகடலென திரண்ட தொண்டர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் முதமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கோவைக்கு சென்று விமானத்தில் தலைநகர் சென்னை திரும்பினார். அப்போது விமானத்தில் சொகுசு இருக்கையில் அமராமல் சாதாரண மக்களுடன் எகாணமி வகுப்பில் அமர்ந்து பயணம் செய்தார்.

இந்த சந்தர்ப்பத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகே அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனை செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று இரவு தமிழக முதலமைச்சர் திரு. M.K.ஸ்டாலின் அவர்களின் அருகில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பொது மக்களுடன் எகாணமி வகுப்பில் விமானத்தில் பயணிப்பதைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவரது எளிமை அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Also Read: தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொலை.. வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு !