M K Stalin
"கூட்டாட்சி மற்றும் மாநில உரிமையை விட்டுக்கொடுக்காதவர்" -முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த காந்தியின் பேரன் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அவரை பற்றி புகழ்ந்து மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி telegraph என்ற ஆங்கில நாளிதழில் சிறப்பு கட்டுரை
”தற்செயல் நிகழ்வுகள் என்னைப் போன்றவர்களால் கூட மிகைப்படுத்தப்படலாம். மார்ச் 1-ம் தேதி ஒரு முன்னாள் முதலமைச்சர் மற்றும் பதிவியில் இருக்கும் முதலமைச்சர் ஆகியோரின் பிறந்தநாள். இந்த இருவரையும் அறியும் பாக்கியம் எனக்கு கிடைத்து. 2000 முதல் 2011 வரை மேற்கு வங்க முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா 1944-ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு தற்போது 79 வயதாகிறது.
அதேபோல மார்ச் 1, 1953ல் பிறந்த தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 70 வயதாகிறது. புத்ததேவ் பட்டாச்சார்யா தனது பிறந்தநாளை அவர் குடும்பம் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களுடன் தனி அறையில் கொண்டாடுவார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுநிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. அப்போது அவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். அவருக்கு எதிர்க்கருத்து கொண்டவர்களும் அவரை பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
தனிப்பட்ட விவகாரங்களை தாண்டி இந்த இருவருக்கும் சில பொதுவான தன்மைகளும் இருக்கின்றான். இருவரும் அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள். புத்ததேவ் பட்டாச்சார்யா மார்க்சிய கொள்கையை பின்பற்றும் நிலையில், மு.க.ஸ்டாலின் சுயமரியாதையை பேசும் திராவிட இயக்க கொள்கையை பின்பற்றுகிறார்.
புத்ததேவ் பட்டாச்சார்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) அவரின் தலைவராக இருந்த ஜோதிபாசு மறைந்த பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதல்வருமாக இருந்த கலைஞரின் மறைவுக்கு பின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்றார்.
இந்த இருவருக்குமே அரசியலை தண்டி அதிக அளவில் ஆதரவாளர்களும், தீவிர எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இருவரிடமும் கவர்ச்சி, அமைதி, அலட்டிக்கொள்ளாத திறன் ஆகியவை உள்ளது.
இருவரும் தங்கள் தாய்மொழிகளில் நன்கு பேசக்கூடியவர்கள் என்றாலும் குறைவாகவே எழுதக்கூடியவர்கள். இருவரும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி ஆன்மாவின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள். கூட்டாட்சி மற்றும் மாநில உரிமையை சற்றும் விட்டுக்கொடுக்காதவர்கள்.
அதே நேரம் அவர்களுக்கு இடையில் வேறுபாடுகளும் இருக்கிறது. புத்ததேவ் பட்டாச்சார்யா குடும்பத்தின் கலாச்சார பின்னணியும் அவர் தேர்ந்தெடுத்த அரசியல் பாதையும் வேறுபட்டது. ஆனால், மு.க.ஸ்டாலினின் அரசியல் பரம்பரை என்பது திருவள்ளுவர் ,பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கைகளால் வழிவழியாக வந்தது. அந்த கொள்கையில் இருந்து அவர் விலகிவிடவேயில்லை.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபண்ணா தொகுத்த ஜவஹர்லால் நேருவைப் பற்றிய புத்தகம் ஒன்று சென்னையி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு காங்கிரசுகாரனும் பெருமைப்படக்கூடிய வகையிலும், எந்த வடநாட்டு தேசியவாதியும் பெருமைப்படக்கூடிய வகையிலும் ஒரு உரையை நிகழ்த்தினார். சுதந்திரப் போராட்டத்தில், அரசியல் நிர்ணய சபையில், தேசிய அரசியலில் பிரதமர் நேருவின் பங்கு பற்றிப் பேசிய ஸ்டாலின் வடக்கையும் -தெற்கையும், ஒன்றியத்தையும் - மாநிலத்தையும் தடையின்றி ஒன்றிணைத்தார். திமுக -காங்கிரஸ் கூட்டணி காரணமாகதான் அவர் அப்படி பேசினால் என சிலர் கூறலாம். ஆனால், அது உண்மையில்லை.
ஸ்டாலினும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்கள் அதற்கும் மேற்பட்டவர்கள். அவர்கள் அரசியலில் இருப்பவர்களையும் படிக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பிறந்த மார்ச் 1-ம் தேதி என்னைப் பொறுத்தவரை அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?