M K Stalin
“நானே செல்ஃபி எடுக்குறேன்” : அமீரக வாழ் தமிழர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த முதலமைச்சர்!
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அமீரக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு தொழில் கண்காட்சி, முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ்ச் சமூகம் சார்பாக நடைபெற்ற ‘நம்மில் ஒருவர்; நம்ம முதல்வர்’ பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “துபாயில் நடந்த நிகழ்ச்சியின்போது, ஏனென்றால் இங்கு வந்திருக்கக்கூடிய 99 சதவீதம் என்று கூட சொல்ல வேண்டாம், 100 சதவீதமும் எப்படியாவது இவரிடம் போய் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள், அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டிலேயே அது இருக்கிறது என்றால் இங்கு இல்லாமல் போய்விடுமா அது? அதனால்தான், துபாயில் என்ன செய்தேன் என்றால், நீங்கள் அப்படியே அமர்ந்திருங்கள், நான் இந்த மேடையில் இருந்துகொண்டு உங்களை செல்பி எடுத்துக்கொண்டு, அது சமூக ஊடகங்களில் எல்லாம் வந்துவிடும், வந்துவிட்டது என்றால், அதை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். சுலபமாக எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல், எந்த பிரச்சனையும் இல்லாமல் அதை எடுத்துக் கொள்ள முடியும். எனவே அமைதியாக அப்படியே உட்கார்ந்திருங்கள், நான் உங்களிடத்தில் செல்பி எடுத்துக் கொள்வதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?