M K Stalin
”கல்வியில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது” - ட்ரோன் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆளில்லா வான்வெளி வாகன கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
குறைந்தபட்சம் 2 கிமி தொடங்கி 30 கிமி தொலைவு வரை செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானம் தமிழ்நாடு ஆளில்லா வான்வெளி வாகன கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தமிழ்நாடு ஆளில்லா வான்வெளி வாகன கழகத்தின் கண்காட்சியையும் முதலமைச்சர் பார்வையிட்டார். தொலைதூர கண்காணிப்பிற்க்கான ஆளில்லா விமானம், வேளாண்மை பாதுகாப்பு,தேடல் பணிகளில் ஒருதிறன் அணிவகுப்புடன் கூடிய ஆளில்லா விமானங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில், தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, புதுமையான படிப்புகள் கற்க உயர்கல்விதுறை மாணவர்களுக்கு அலோசனைகளை வழங்க வேண்டும் எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில்தான் ஆற்றல் மிக்க சக்தியான இளைஞர்கள் அதிகம் உள்ளனர். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் மட்டும் போதாது. உயர்கல்வியில், ஆராய்ச்சியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் பெறும் அளவிற்கு உழைக்க வேண்டும் எனக் கூறினார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!