M K Stalin
கொட்டும் மழையில் வேட்டியை மடித்துக்கட்டி ஆய்வில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #Album
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.
மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமின்றி மழைநீர் தேங்காதவாறும், தேங்கக்கூடிய மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, சென்னையில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் மாநகராட்சி எவ்வாறான பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சென்னை திரு.வி.க.நகர் ஸ்டீபன் சாலையில் நடைபெற்றும் பாலப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் புளியந்தோப்பு பகுதியில் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!