M K Stalin
"தமிழ்நாட்டு அரசியலில் மதவாத சக்திகளுக்கு கிஞ்சித்தும் இடம் கிடையாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
"தி டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டிற்கு தமது ஆட்சியின் 100 நாள்கள் நிறைவு சாதனைகளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அதன் இரண்டாம் பாகம் பின் வருமாறு:-
இந்த அரசை இயக்குவது ‘கலைஞர்’ எனும் பேராற்றல்தான்!
செய்தியாளர்: Do you miss your father? That he was not around to have seen you achieve victory and watch your performance as CM?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இந்திய அரசியலின் தனிப் பெரும் தலைவரான கலைஞரை நான் மட்டுமல்ல, கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்பும், தமிழ்நாட்டு மக்களும் பெரிதும் ‘மிஸ்' பண்ணுகிறோம். தி.மு.கழகம் 6-ஆவது முறையாக ஆட்சி அமைத்ததை அவர் காண நம்முடன் இல்லையே என்ற ஏக்கம் என் நெஞ்சில் உண்டு. இந்த ஆட்சியைக் காணவும் அதற்கான வழிகாட்டுதலை வழங்கவும் அவர் இல்லை என்றாலும் என்னையும் இந்த அரசையும் இயக்குவது தலைவர் கலைஞர் எனும் பேராற்றல்தான். ‘அவர் மறையவில்லை, நம்முள் இருந்து கவனிக்கிறார், வழி நடத்துகிறார்' என்றுநான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அந்த உணர்வோடு தான் நித்தமும் நான் செயல்பட்டு வருகிறேன். எமது சகாக்களும் செயலாற்றிக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: How different is your style of functioning as CM from that of your father?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அவர் கலைஞர் மு.கருணாநிதி. நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பெயரில் உள்ள ஒற்றுமை போலவே செயலிலும், இது காலத்திற்கேற்ற கலைஞர் ஆட்சிதான். நான் கலைஞரின் தோளில் நிற்கிறேன். அவரது அனுபவத்தையும், தொலை நோக்குச் சிந்தனையையும் கொண்ட ஆட்சியாகத் தான் எனது ஆட்சி செயல்படும்.
மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் அரசியல் தேவையில்லை!
செய்தியாளர்: Your consultative, inclusive approach towards the opposition are you scripting a new style of governance and politics? What is the inspiration for this?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவது என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான போது மேற்கொண்ட அணுகுமுறை. கட்சிமாச்சரியங்கள் அரசியல் களத்தில் இருக்கலாம். மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளில் தேவையில்லை; அங்கே நாகரிகம் தான் முன்னிலை பெற வேண்டும்.
செய்தியாளர்: But the AIADMK has accused your government of political witch hunting and vendetta politics with the searches in M R Vijayabaskar and S P Velumani’s premises. Are there going to be more such actions?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் நலனுக்கு எதிரான அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஊழல் செயல்பாடுகள் மீதான சட்டப்படியான நடவடிக்கைகளையே தி.மு.க. அரசு மேற்கொள்கிறது. தணிக்கை அறிக்கை தொடங்கி, ஆதாரங்கள் கொண்ட பலவித ஊழல் புகார்களின் அடிப்படையில் நேர்மையான நடவடிக்கைகள் தொடரும். சட்டம் அதன் கடமையை சரியாகவே செய்யும்.
கடுமையான சவால்களை வென்று சாதனை படைக்க அரசு பாடுபடும்!
செய்தியாளர்: What do you see as your big five challenges ahead?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கொரோனா பேரிடர், நெருக்கடியான நிதி நிலைமை, தொழில்துறை வளர்ச்சித் தேக்கம், ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட மாநில உரிமைகள், 10 ஆண்டுகளாக மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்படாதது, நிர்வாகச் சீர்கேடு இவை கடுமையான சவால்கள். அந்த சவால்களை வென்று சாதனை படைத்திட இந்த அரசு முழுமூச்சாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
செய்தியாளர்: How do you ensure that everyone, not just DMK cadres or sympathisers, benefit out of programmes likes ‘Ungal Thoguthiyil Muthalamaichar’?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நான் தி.மு.க.வுக்கு மட்டும் முதலமைச்சரல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கான முதலமைச்சர். மக்கள் என்னை நம்பி மனு அளிக்கிறார்கள். அதற்கான துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தி.மு.க.வாக இருந்தாலும் அ.தி.மு.க.வாக இருந்தாலும் மற்ற கட்சியினராக இருந்தாலும் எந்தக் கட்சியையும் சாராதவராக இருந்தாலும் அனைவரும் தமிழ்நாட்டு மக்கள்தான். தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் பொதுவானவனாக நடுநிலை வகித்து நான் செயல்பட்டு வருகிறேன்.
திட்டமிட்ட பொய்ப் பரப்புரை!
செய்தியாளர்: How do you plan to strengthen the DMK in the western belt where you got relatively poor results last polls?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மேற்கு மாவட்டங்களிலும் தி.மு.க. வலுவாகவே இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு மாவட்டம் எங்களுக்கு முழு வெற்றியைக் கொடுத்தது. சட்டமன்றத் தேர்தலில் முழு வெற்றிதான் பெறவில்லையே தவிர, மக்களின் வாக்குகளை கணிசமான அளவுக்குப் பெற்றிருக்கிறோம் என்பதை தேர்தல் புள்ளி விவரங்களைப் பார்த்தாலே அனைவருக்கும் புரியும். அ.தி.மு.க.வினர் பொய்ப்பரப்புரைகள் செய்து - ஊழல் பணத்தை வாரி இறைத்த பிறகும் மேற்கு மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைத்த ஆதரவைப் பொறுத்துகொள்ள முடியாத ஒரு கூட்டம் செய்யும் திட்டமிட்ட பொய்ப் பரப்புரைதான் உங்கள் கேள்விக்கான அடிப்படை எனக் கருதுகிறேன். தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிறைந்து நற்பெயருடன் அனைத்துப் பகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வலுவாகவே இருக்கிறது.
மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை!
செய்தியாளர்: Will a weakened AIADMK help the DMK more or the BJP?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க. தனது பலத்தை மட்டுமே எப்போதும் நம்பி அதைச் சார்ந்து வலிமையாக நிற்கும் இயக்கம். தமிழ்நாட்டு அரசியலில் மதவாத சக்திகளுக்கு எப்போதும் கிஞ்சித்தும் இடம் கிடையாது.
செய்தியாளர்: The DMK had joined hands with the BJP in the past. Can that repeat?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் அரசியல் ரீதியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் இருந்து வருகிறோம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் பேட்டியளித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!