M K Stalin
கோவை புறக்கணிக்கப்படுகிறதா? எங்கள் கட்டமைப்பு வசதிகளை வந்து பாருங்கள் என அழைப்பு விடுத்த முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.5.2021) கோயம்புத்தூரில் கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது அளித்த பேட்டி வருமாறு :-
கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு பணிகளைப் பார்வையிடுவதற்காக நேற்று இரவு ஈரோடு வந்து, இன்று காலையிலே பெருந்துறை, திருப்பூர் ஆகிய இடங்களிலே ஆய்வுப் பணிகளில் நான் ஈடுபட்டு புதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள், கார் ஆம்புலன்ஸ் சேவை இதையெல்லாம் தொடங்கி வைத்துள்ளேன். கோயம்புத்தூரில் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையை பார்வையிட்டுள்ளேன். மருத்துவர்களைப் போல PPE Kit அணிந்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரடியாக சென்று பார்த்தேன். அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் சந்தித்து உரையாடினேன்.
நம்பிக்கை ஏற்படுத்தவே பிபிஇ கிட் அணிந்து சென்றேன்!
PPE KIT அணிந்து கொள்வது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லாருக்கும் தெரியும். பல மணிநேரம் அந்த உடையை அணிந்துகொண்டு நம்முடைய மருத்துவர்களும், செவிலியர்களும் எவ்வாறு பணியை செய்கிறார்கள் என்பது பாராட்டுக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் அந்த நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் நானும் அந்த உடையை அணிந்து கொண்டு, அந்த வார்டுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுப் பணியை மேற்கொண்டேன் என்பது உங்களுக்கு தெரியும். அதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையை நானும், நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும், வனத்துறை அமைச்சர் அவர்களும், உணவுத்துறை அமைச்சர்களும் அந்தப் பணியை மேற்கொண்டோம்.
கொரோனா பரவாமல் தடுத்தல் - தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காத்தல் ஆகிய இரண்டையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்த வரையில் 50 ஆயிரம் என்ற உச்ச நிலையைத் தொட்டது, கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையில் 43 ஆயிரம் என்ற உச்ச நிலையைத் தொட்டது, தமிழகத்தைப் பொறுத்த வரையில் 36 ஆயிரம் என்ற அளவிலேயே கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ஆம் தேதியும் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆய்வுப் பணிக்காக வந்தேன். அப்போதே இந்தப் பணிகளை எல்லாம் முடுக்கிவிட்டேன். தளர்வற்ற ஊரடங்கால் கொரோனா பரவல் குறைவு கடந்த 24-ஆம் தேதியில் இருந்து போடப்பட்ட தளர்வற்ற முழு ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
குறிப்பாக சென்னையில் நன்றாகவே குறைந்து உள்ளது. மேலும் சில மாவட்டங்களிலும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சென்னையைவிட கோவை தாண்டியது என்று சொல்லக் கூடிய அளவுக்கு சில நாட்களாக எண்ணிக்கைகள் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், எங்கள் அரசு எடுத்த நடவடிக்கையால் இரண்டு நாட்களாக கோவையிலும் தொற்று குறைந்து வருவதைக் காண முடிகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அதிகம். வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நிறுவனங்கள் அதிகம். இப்படி பல்வேறு காரணங்கள் இதில் அடங்கியுள்ளது. எது காரணமாக இருந்தாலும், கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை எல்லாம், அரசு செய்து வருகிறது.
தளர்வற்ற ஊரடங்கால் கொரோனா பரவல் குறைவு
கடந்த 24-ஆம் தேதியில் இருந்து போடப்பட்ட தளர்வற்ற முழு ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து உள்ளது. குறிப்பாக சென்னையில் நன்றாகவே குறைந்து உள்ளது. மேலும் சில மாவட்டங்களிலும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சென்னையைவிட கோவை தாண்டியது என்று சொல்லக் கூடிய அளவுக்கு சில நாட்களாக எண்ணிக்கைகள் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், எங்கள் அரசு எடுத்த நடவடிக்கையால் இரண்டு நாட்களாக கோவையிலும் தொற்று குறைந்து வருவதைக் காண முடிகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அதிகம். வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பேர் இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நிறுவனங்கள் அதிகம். இப்படி பல்வேறு காரணங்கள் இதில் அடங்கியுள்ளது. எது காரணமாக இருந்தாலும், கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை எல்லாம், அரசு செய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் மட்டும் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணிகளை நான் நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன். கோவை மாவட்டத்துக்கான தடுப்புப் பணிகளை முடுக்கிவிட அமைச்சர் பெருமக்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் இங்கேயே தங்கி அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த 2 நாட்களாக இந்த கொங்கு மண்டலத்தில் தங்கி இங்கு பல பகுதிகளுக்கு குறிப்பாக கிராமப் பகுதிகளுக்கு அவர் நேரடியாகச் சென்று ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த 27ஆம் தேதி கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடத்தில் காணொலிக் காட்சி மூலமாக தொடர்பு கொண்டு விவாதித்துள்ளேன். அதற்குப் பிறகு ஒவ்வொருமாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரிகள்நியமிக்கப்பட்டு, அவர்களும் களத்தில் இறங்கிகளப்பணி ஆற்றி வருகிறார்கள்.
பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க பறக்கும் படைகள்
மாநிலம் முழுமைக்குமான தலைமை கட்டளை மையம் எனப்படும் ‘வார் ரூம்’ சென்னையில் இருப்பதைப் போல மாவட்டங்களிலும் கட்டளை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டளை மையம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்வதற்காக கோவை மாவட்டத்தில் நான்கு ஒருங்கிணைப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற அளவில் கொரோனா பரவ விடாமல் தடுக்க கிராமப்புறக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள்நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில்படுக்கை வசதிகள் ஏராளமாக இருக்கின்றன. படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள்என ஏராளமாக அமைந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைமையங்கள் தற்காலிகமாக பல்வேறுஇடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. பாரதியார் பல்கலைக் கழகம், கொடிசியா,தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம்,பி.ஏ.கல்லூரி, சீனிவாசா கல்யாண மண்டபம்,வித்தியாவிகாஸ் பள்ளி, ஜிசிடி கல்லூரி, கேசிடிகல்லூரி ஆகியவற்றில் மொத்தம் 800படுக்கைகள் உருவாக்கி இருக்கிறோம்.ஆக்சிஜன் தட்டுப்பாடுஇப்போது இல்லை!இவற்றிலும் காலி இடங்கள் தற்பொழுதுஉள்ளன. சீனிவாசா கல்யாண மண்டபம்,கொடிசியா அரங்கம் ஆகிய இரண்டிலும் சிறப்புசித்த மருந்து சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொகளூர், நெகமம் ஆரம்பசுகாதார மையத்தில் தாய்மை அடைந்தபெண்களுக்கான சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவையைப் பொறுத்தவரை 4 ஆயிரத்து 9 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது.கடந்த 10 ஆம் தேதி முதல் கோவைமாவட்டத்தில் அதிகளவிலான கொரோனாமருத்துவப் பரிசோதனைகள் செய்துவருகிறோம். இதுவரை கோவை மாவட்டத்தில்5 லட்சத்து 85 ஆயிரத்து 713 பேருக்கு தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 3 வாரங்களில் மட்டும் 1 லட்சத்து51 ஆயிரத்து 61 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்ல எந்த மாவட்டத்திலும் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன்தட்டுப்பாடு என்கிற நிலைமை, இப்போழுதுஇல்லை. இப்படி அனைத்து வகையிலும் தயார்நிலையில் தமிழக அரசு உள்ளது.கொரோனா தடுப்புப் பணிகளில் கோவை புறக்கணிப்பட்டுவதாக சிலர் புகார்களைதொடர்ந்து கூறிவருகிறார்கள். நானும் கேள்விப்பட்டேன். அப்படிச் சொல்பவர்களுக்கு, நான்அரசியல் ரீதியாக பதில் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அரசியல் நோக்கத்தோடுஅந்த கருத்துக்களை சொல்லலாம், ஆனால்நான் தெளிவாக, விளக்கமாக, விரிவாகசொல்ல விரும்புவது. நாங்கள் உருவாக்கிவைத்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளைஅவர்கள் வந்து நேரடியாக பார்வையிடவேண்டும். அதை பார்வையிட்டால் அந்தவிமர்சனத்தை வைக்கமாட்டார்கள் என நான்நம்புகின்றேன்.
அதேபோல் சென்னைக்கு அடுத்தபடியாககோவையில் தான் அதிகளவில் தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்ல, எல்லாஊரும் எங்கள் ஊர் தான். எந்த பாரபட்சமும்நாங்கள் பார்ப்பது இல்லை. இன்னும் கூடவிளக்கமாக சொல்ல வேண்டும் என்றால்தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகள் வந்துகொண்டிருந்தது,பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைக்கின்ற சூழ்நிலைவந்து விட்டது. நான் சென்று என்னுடையதொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கிக் கொண்டு தலைவர்அவர்களின் நினைவிடத்திற்குச் சென்றேன்.நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டுதிரும்பியபோது, பத்திரிகை நிருபர்கள் என்னைசூழ்ந்து கொண்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். என்ன உங்கள் லட்சியம்?, ஆட்சிஅமைக்கப் போகிறீர்கள் கருத்துக்கள் கூறமுடியுமா?’ என கேட்ட போது, ஒரே வார்த்தைதான் கூறினேன். ‘எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையிலேஎங்கள் பணி இருக்கும்’, எங்களுக்கு வாக்களிக்காதவர்கள், இவர்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்ற வகையில் எங்கள் பணி இருக்கும்’ என்று தெளிவாக கூறினேன். அதையேத்தான் இப்பொழுதும்குறிப்பிடுகின்றேன்.
எந்த பாரபட்சமும் நாங்கள்காட்டமாட்டோம் என்ற உறுதியைசொல்லுகின்றேன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், லேசான அறிகுறி தெரிந்தாலேஉடனடியாக மருத்துவமனைக்கு வந்து விடவேண்டும். நான்கைந்து நாட்கள் கழித்துவருவதால்தான் உடனடியாக மூச்சுத்திணறலை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது.வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுபவர்கள்வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது.வீட்டுக்குள்ளும் தங்களை முழுமையாகதனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் தங்கள் மூலமாக வீட்டில்உள்ள மற்றவர்களுக்கு பரவி விடாமலும்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.கொரோனா கட்டுப்பாட்டு பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம்இருக்கக் கூடாது. கோவை மாவட்டத்தில் 631நகர்ப்பகுதிகளும், 302 ஊரகப் பகுதிகளும்கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஆட்கள் நடமாட்டம்முழுமையாக இருக்கக் கூடாது. தொற்றால்பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அரசுசெய்து வருகிறது.தொற்றை வாங்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்வது மக்களின் கையில் தான்இருக்கிறது.
"கொரோனாவை யாருக்கும்தரவும் மாட்டேன் - யாரிடமும் இருந்துபெறவும் மாட்டேன்" என்று ஒவ்வொருவரும்உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரேநாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். ஒரு நாளில் 1.70 லட்சம் பேருக்குஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்கிறோம்.இந்தியாவிலேயே அதிகளவிலான ஆக்சிஜன்வசதி கொண்ட படுக்கைகளை உருவாக்கிவைத்துள்ளோம். இவை அனைத்தும் இந்தஅரசால் செய்யப் பட்டு வருகிறது. இன்னும்கூடுதல் வசதிகளை உருவாக்கி வருகிறோம்.அதே நேரத்தில் பொதுமக்கள், அரசுவிதித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும்என்பதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். அரசும் மக்களும் சேர்ந்தால்கொரோனா மட்டுமல்ல எந்த நோயையும்வெல்லலாம். இந்த விழிப் புணர்வைஊடகங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கவேண்டும் என்று உங்கள் மூலமாக நான்கேட்டுக் கொள்கிறேன்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!