M K Stalin
“அ.தி.மு.கவினர் தாக்கியதால் கரு கலைஞ்சு போச்சு” - முறையிட்ட பெண்ணுக்கு அண்ணனாக உறுதியளித்த மு.க.ஸ்டாலின்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி - கோவை ரோடு, சங்கம்பாளையம் - ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய லாவண்யா என்ற இளம்பெண், “ஊரடங்கு காலத்தில் என்னுடைய தந்தையை தகாத முறையில் பேசிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊர்த் தலைவர் மீது புகார் அளித்த ஒரே காரணத்திற்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எங்கள் வீடு புகுந்து தாக்கினர்.
எனது அப்பாவை தாக்கியபோது காப்பாற்ற முயன்ற என்னை கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் எனது வயிற்றிலிருந்த கரு கலைந்துவிட்டது. இதற்குக் காரணமான அராஜக அ.தி.மு.கவினர் மீது என் அண்ணனாக நீங்கள் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார்.
லாவண்யாவின் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “என்னை அண்ணனாக நினைத்து சகோதரி லாவண்யா அவர்கள் இங்கே தனக்கு ஏற்பட்ட சோகத்தை சொன்னார். ஊரடங்கு காலத்தில் தன்னுடைய தந்தையை தகாத முறையில் பேசிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊர்த் தலைவர் மீது லாவண்யா குடும்பத்தினர் சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று லாவண்யா அவர்கள் சொன்னார். அந்த ஒரே காரணத்திற்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வீடு புகுந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியிருக்கிறார்கள்.
அப்பாவை காப்பாற்ற முயன்ற லாவண்யாவை கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக தாக்கியதால் அவரது கர்ப்பம் கலைந்திருக்கிறது. இது மிகவும் கோரமான நிகழ்ச்சி. வருத்தப்பட வைக்கும் நிகழ்ச்சி. ஆசிட் வீச்சு, உருட்டுக்கட்டை, பேருந்தோடு வைத்து கொளுத்துவது இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவே இல்லை என்று சென்று கொண்டிருக்கிறது. இந்த அயோக்கியர்களை நாட்டில் விட்டு வைக்கக்கூடாது. நிச்சயமாக உறுதியாக அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் சிறையில் பிடித்து போடுவதுதான் - அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் முதல் வேலையாக இருக்கும். லாவண்யா அவர்களே, தைரியமாக இருங்கள். என்னை சகோதரன் என்று சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சகோதரனாக இருந்து நிச்சயமாக உங்களுக்கு நான் பாதுகாப்பாக இருப்பேன் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என உறுதியளித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!