M K Stalin
“அதிமுகவால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது.. 234 தொகுதிகளிலும் நாம்தான்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சென்னை வடக்கு மாவட்ட தே.மு.தி.கவினர் அக்கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், 3000க்கும் மேற்பட்டோர் தே.மு.தி.கவில் இருந்து தி.மு.கவில் தங்களை இணைத்துக்கொண்டனர். தே.மு.தி.க வடக்கு மாவட்ட செயலாளர் பா.மதிவாணன் அண்மையில் தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், அக்கட்சியின் மற்ற உறுப்பினர்களும் தங்களை தி.மு.கவில் இணைத்துக்கொண்டனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் இருந்தனர்.
பின் மேடையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
“இன்னும் நான்கே மாதத்தில் தேர்தல், அந்த தேர்தலில் நான் எதிர்பார்ப்பதை விட, இந்த மேடையில் நாங்கள் எதிர்பார்ப்பதை விட, நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஒட்டு மொத்த தமிழகமும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். என்ன தான் செய்தாலும் தமிழகத்தில் அதிமுக எதிர் கட்சியாக கூட வர முடியாது.
மக்களை ஏமாற்ற வேண்டும் என்று அரசு பணத்தில் பொய்யான விளம்பரங்களை அதிமுக செய்து வருகின்றனர். நம் வரி பணம் அது.
சில தினங்களுக்கு முன்பு நான் 200 சீட்களுக்கு மேல் திமுக வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் தற்போது மக்கள் கிராம சபை கூட்டங்கள் மூலம் கிடைக்கும் மக்கள் ஆதரவு மூலம் பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது.” என்று கூறினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?