M K Stalin
“சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாள்...” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, கேரள மக்களுக்கும், மலையாள மொழி பேசும் மக்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஓணம் பண்டிகையையொட்டி இன்று (10-09-2019) வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உற்சாகத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் 'ஓணம் திருநாள்' கொண்டாடும் கேரள மாநில மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறுவடைத் திருநாளான 'ஓணம் திருநாள்' கேரள மக்களின் பாரம்பரியப் பண்பாட்டுத் திருவிழா. சாதி மத பேதமின்றி கேரள மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடிடும் இந்த விழா, அனைவரின் வாழ்விலும் எல்லா விதமான இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் திருவிழா ஆகும்.
ஓணம் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் வாழும் கேரள மக்களுக்கு 'சிறப்பு அரசு விடுமுறை' அளித்ததை இந்த நேரத்தில் நினைவூட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?