M K Stalin
ஆட்சி முடிவதற்குள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல அமைச்சர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் - மு.க.ஸ்டாலின்
தி.மு.க செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.கண்ணப்பன் அவர்கள் எழுதிய "வாழ்வும் பணியும்" நூல் வெளியீட்டு விழா கோவை ஈச்சனாரியில் உள்ள செல்வம் மஹாலில் நடை பெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ''இந்த விழாவில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியையும், பெருமையும் அளிக்கிறது. புராணத்தில் கண்ணன் தேர் ஒட்டியதுபொல் அண்ணன் கண்ணப்பன் காரோட்டியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நூலில் கழக வரலாறும் உள்ளது. லட்சகணக்கான கண்ணப்பன்கள் இந்த இயக்கத்தில் இருப்பதால் தான் இந்த இயக்கத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியவில்லை.
அண்ணன் கண்ணப்பன் போல நம் இயக்கம் பற்றி பல புத்தகங்கள் எழுத வேண்டும் அப்போதுதான் மாணவர்கள், இளைஞர்களுக்கு நம் இயக்கத்தின் வரலாற்றை படிக்கும் வாய்ப்பு வரும். மாணவராக இருந்து மத்திய அமைச்சராக உயர்ந்தவர் கண்ணப்பன்.
தி.மு.க மாணவர் அணியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், தி.மு.க உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் என்று படி படியாக உயர்ந்து பல பொறுப்புகளை வகித்தவர் அண்ணன் கண்ணப்பன். அவரின் உழைப்பு தியாகத்தின் காரணமாக இந்த நிலைகளை அடைந்துள்ளார். அவர் எப்படி பணியாற்றினார் என்பதை அறிய இந்த புத்தகம் உதவும்.
தன்னுடைய தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்ட போதிலும் விலைவாசி உயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டு 4 மாதம் சிறை சென்றார். நெருக்கடி நிலை காலத்தில் நெருக்கடி நிலையை எதிர்க்க கூடாது என்று டெல்லியில் இருந்து வந்த தூதுவர்கள் கூறினார்கள் ஆனால், கலைஞர் அதை ஏற்கவில்லை. நெருக்கடி நிலையை எதிர்த்து தீர்மானம் போடப்பட்டது. உடனடியாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர் பலர் மரணமடைந்தனர்.
அப்போது அங்கு செல்ல கார் ஒட்ட ஆளில்லாமல் தலைவர் இருந்தபோது நான் இருக்கிறேன் என்று வாகனம் ஒட்டியவர் அண்ணன் கண்ணப்பன். காரோட்டி கண்ணப்பன் என்று ஒரு திருமண விழாவில் கலைஞர் பேசியுள்ளார்.
அப்படி பல தியாகங்களை கடந்துதான் இந்த இயக்கம் இந்த நிலைக்கு வந்துள்ளது. அப்படிப்பட்ட இயக்கத்திற்கு நான் தற்போது தலைவராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். தமிழக கோவில்களில் தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்கள் தி.மு.க ஆட்சியில் இயற்றப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன்.
தமிழ் மொழியையும் இனத்தையும் அளிக்க பல முயற்சிகள் நடந்துவருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. பதவி ஏற்ற அன்றே தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, அண்ணா வாழ்க என்று குரல் கொடுத்தனர். காவிரி, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து நம் உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ்மொழிக்காக போராடும் இயக்கமாக தி.மு.க விளங்குகிறது.
ஆளும் கட்சியை எதிர்த்து நாம் வேலூர் தேர்தலில் பெற்றுள் வெற்றி சாதாரணமான வெற்றி இல்லை. கடந்த சட்டபேரவை பொது தேர்தலில் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 1971ல் தி.மு.க வெற்றி பெற்றது போல 234 தொகுதிகளில் நாம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் போது அடுத்த 25 ஆண்டுகளுக்கு தி.மு.க.வை யாராலும் தொட்டு கூட பார்க்கமுடியாது.
வெளிநாட்டிற்கு முதல்வர், அமைச்சர்கள் சென்றுள்ளனர். ஆனால் முதலீடுகள் வருவதாக வெறும் செய்திகள் மட்டும் தான் வருகிறது. அப்படி வந்தால் பாராட்டலாம். ஆனால் வர வாய்ப்பில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் எவ்வளவு வந்தது என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட கோரினேன். ஆனால் வெளியிடவில்லை. ஆட்சி முடிவதற்குள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல அமைச்சர்கள் முடிவெடுத்துவிட்டார்கள்'' எனத் தெரிவித்தார்.
புத்தக வெளியிட்டு விழாவில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, நூலாசிரியர் சுந்தரம், தி.ஆர்.பாலு, ஆ ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், விடுதலை விரும்பி மற்றும் பல தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!