M K Stalin
தமிழக அமைச்சர்கள் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள் - மு.க ஸ்டாலின்
சுதந்திர போராட்ட மன்னர் பூலித்தேவரின் 304வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் அவரது சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி , கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அ.தி.மு.க ஆட்சியில் ஏற்கனவே இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதில் 5.5 லட்சம் கோடி ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்தனர். அது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்து இருந்தோம். ஆனால், இதுவரை பதில் இல்லை.
இந்நிலையில் அமைச்சர்களின் வெளிநாடு பயணம் பொழுதுபோக்கிற்காகச் சென்றது போல உள்ளது. தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவை போல் இருக்கின்றது.
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட அவரவர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தி.மு.க, காங்கிரஸ் தலைமை கலந்து பேசி யார் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !