M K Stalin
மழை,வெள்ளம்,நிலச்சரிவு; கடுமையாக பாதிக்கப்பட்ட நீலகிரி - முதல் ஆளாக மக்கள் உதவிக்கு சென்ற மு.க.ஸ்டாலின்!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாநிலங்களான தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு என பல இன்னல்களுக்கு ஆளாகி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்து மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி மற்றும் சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமலும், உரிய நேரத்துக்கு உணவு கிடைக்காமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் பார்வையிடுகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்ற அவர், கோவையில் இருந்து கார் மூலம் நீலகரிக்குச் சென்றார்
கூடலூரின் நடுவட்டம் பகுதியில் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ள சாலைகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை விவரித்தனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த அவர், தி.மு.க சார்பில் நிதியுதவியும் வழங்கினார்.
அடுத்ததாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள முகாம்களில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இதன் பின்னர் சேரம்பாடி செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளை பார்வையிடுகிறார்.
உதகையின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிட்டு மக்களையும் சந்திக்கவுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!