M K Stalin
கொளத்தூரில் 82 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளம் : திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!
சென்னை கொளத்தூரில் ரூபாய் 82 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட அரிதாஸ் தாமரைக் குளத்தை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கோடைகாலங்களில் கொளத்தூர் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கொளத்தூர் பகுதியில் உள்ள அரிதாஸ் தாமரைக் குளத்தை 5 கட்டங்களாக மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு குளத்தை முழுவதுமாக சீரமைக்க உத்தரவிட்டு, சீரமைப்புப் பணிகளுக்கான தொகை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் தூர்வாரி சீரமைக்கப்பட்ட அரிதாஸ் தாமரைக் குளத்தில் சுற்றுச்சுவர்கள், நடைபயிற்சிக்கான பாதை, உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளிட்டவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குளம் தூர்வாரப்பட்டதன் மூலம், தண்ணீர் அனைத்து காலங்களிலும் சேமித்து வைக்கப்படும். அதேபோல, மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் தண்ணீர் குழாய் மூலம் குளத்திற்கு செல்லும் வண்ணம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இன்று, கொளத்தூரில் இந்தக் குளத்தைத் திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சிக் கருவிகளில் அவர் உடற்பயிற்சியும் மேற்கொண்டார். தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் ஸ்டாலின்.
கொளத்தூர் பெரியார் நகரில் 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நூலகம் ஒன்றையும் திறந்து வைத்தார். அனிதா அச்சீவர்ஸ் என்ற பெயரில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் பயின்ற 65 மாணவ - மாணவியருக்கு சான்றிதழ்கள் நோட்டுப் புத்தகங்கள், லேப்டாப் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?