M K Stalin
உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் வெளியிட வேண்டும் : ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது : “உச்சநீதிமன்றத் தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கான மொழிப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழிலும் வெளியிடவேண்டும் எனும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை உடனே நிறைவேற்றவேண்டும்” என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “உயர்நீதிமன்றத்தில் தமிழகை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்கு சட்டப்பேரவையில் தி.மு.க தீர்மானம் கொண்டுவந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழில் வெளியிட அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும்; அதற்கு தி.மு.க முழு ஆதரவு அளிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !