M K Stalin
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய மு.க.ஸ்டாலின்!
தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதைத் தொடர்ந்து, நீட் தேர்வு குறித்தும், புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்தும் தமிழக அரசிடம் பதில் கேட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது :
“மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் தேர்வு குறித்தும், முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்தும் விவாதிக்க வேண்டும்.
சமூகநீதியை நீர்த்துப்போக செய்து, சாகடிக்கும் செயலை மத்திய பா.ஜ.க அரசு செய்கிறது. சமூக நீதியைக் காப்பாற்ற தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும்.
நீட் தேர்வால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தொடர்கிறது. தமிழகத்தில் கடும் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிக்கப்படுகிறது. தமிழக அரசின் நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் மத்திய அரசின் அலமாரிகளில் தூங்குகின்றன.
தமிழக மருத்துவ மாணவர்களுக்கென தனிப் பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும். நீட் தேர்வு தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏன்?”
முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்தும் நீட் தேர்வு குறித்தும் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின். சமூக நீதியை காப்பாற்ற தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தல்
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !