M K Stalin
தோற்றாலும் வென்றாலும் மக்களுக்காக செயல்படும் இயக்கம் தி.மு.க. - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.கவும் அமோக வெற்றியை பெற்றது.
இடைத்தேர்தலில் நூலிழையில், ஆட்சியமைக்கும் வாய்ப்பு தி.மு.கவுக்கு கிடைக்காமல் இருந்தாலும் சட்டமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது தி.மு.க. மேலும், தமிழகம், புதுச்சேரி உட்பட 38 மக்களவைத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தத்தையும் தி.மு.க. பெற்றுள்ளது.
இதனையடுத்து, தேர்தலில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி, கலங்கல், செலக்கரசல், பட்டணம் புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து நேற்று நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன், தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்ட பொங்கலூர் பழனிசாமியும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினரும் உடன் இருந்தனர்.
அப்போது மக்களிடையே பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ”தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் என்றும் உங்கள் பக்கமே (மக்களுடன்) இருப்போம். வெகு விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.கவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கலைஞரின் ஆட்சியின் போது தமிழகத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்காமல் அ.தி.மு.க அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
மக்களை காக்காமல் மக்கள் நலனில் ஈடுபடாமல் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதிலேயே முனைப்புடன் உள்ளது அ.தி.மு.க. அரசு.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தங்களால் ஜெயிக்க முடியாது என தெரிந்ததனாலேயே இழுத்தடித்து வருகிறது அ.தி.மு.க. நீதிமன்றத்தின் மூலம் முறையிடப்பட்டதால் கூடிய விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது” எனவும் மக்களிடையே பேசினார்.
”மேலும், வாக்களித்தவர்கள், வாக்களிக்காததவர்கள் என்ற எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் மக்களின் நலனுக்காகவும், அடிப்படை தேவைக்காகவும் அரசுடன் தி.மு.கழகம் போராடும்” என மக்கள் முன்னிலையில் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
Also Read
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!
-
”கனமழை - தயார் நிலையில் இருக்க வேண்டும்” : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
86,150 மாணவர்களுக்கும்,8615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஸ்
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !