M K Stalin
மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு அமோக வரவேற்பளித்த திருப்பரங்குன்றம் மக்கள்! (ஆல்பம்)
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்டமாக அங்கு பிரசாரம் செய்தார். கோழிமேடு பகுதியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்புக்காக நடைபயணம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் மக்கள் சூழ பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோழிமேடு பகுதியில் உள்ள வீதிகளில் நடந்தே சென்று செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் மு.க.ஸ்டாலின். அப்போது கழக தலைவருக்கு பெண்கள், சிறுமிகள் என பலர் கை கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்மணி
கோழிமேட்டில் பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலினிடம் கோழிமேடு பகுதி பெண்கள், தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு மற்றும் அடிப்படை பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதற்கு பதிலளித்த தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தாலேயே அடிப்படை இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார்.
1952ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலைமான் அண்ணா மன்றம் அருகில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார் மு.க.ஸ்டாலின்.
அண்ணா மன்றம் அருகே திரண்டிருந்த மக்களிடையே தி.மு.க-வின் ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கும், முதியோர்களுக்கும் பிரத்யேகமாக அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
திண்ணை பிரசாரத்தை தொடர்ந்து, புளியங்குளம் பகுதி மக்களுக்கிடையில் கழக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய ஆட்சியால் ஏற்பட்டு வரும் அவலங்கள் குறித்து பேசினார் மு.க.ஸ்டாலின்.
புளியங்குளத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய பிரசார கூட்டத்துக்கு திரண்ட மக்கள்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?