M K Stalin
சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது - மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மே 17ம் தேதி வரை வாக்கு சேகரிப்பதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அவர் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு வந்துள்ளார். மத்தியில் 3-வது அணி அமைவதற்கு வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?